சென்னை : பிரீமியர் லீக் தொடரில் இறுதிப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி வெஸ்ட் ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று 4-வது முறையாக தொடர்ந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி உள்ளது. எடிகாட் மைதானத்தில் நடைபெற்ற பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணியும், வெஸ்ட் ஹாம் அணிகளும் மோதியது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் முதல் பாதியின் 2-வது நிமிடத்திலேயே மான்செஸ்டர் சிட்டி அணியின் நட்சத்திர வீரரான ஃபில் ஃபோடென் அசத்தலான கோலை அடித்து, தங்களது […]
SAFF U-19 பெண்கள் சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரில் நேபாளத்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. வங்காளதேசத்தில் நடந்த போட்டியில் நேபாளத்தை 4 – 0 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய அணி வீராங்கனைகள் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்காத நிலையில் இரண்டாவது பாதியில் சிறப்பாக விளையாடினர். இதன் காரணமாக 4 கோல்களை விளாசி அசத்தினர். முக்கியமாக நேஹா மிகச்சிறப்பாக விளையாடினார். அவர் இரண்டு கோல்களையும், சுலஞ்சனா ரவுல் […]
கோப்பை ஒருபோதும் சிறந்த வீரரை முடிவு செய்வதில்லை! நீங்கள் சிறந்த பிளேயர் என ரொனால்டோவை கோலி புகழ்ந்துள்ளார். கத்தாரில் நடந்து வரும் உலகக்கோப்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதியில் போர்ச்சுகல் அணி 0-1 என்ற கோல் கணக்கில் மொரோக்கோவிடம் தோல்வியடைந்து உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. மேலும் இந்த தொடர் தான் ரொனால்டோவின் கடைசி உலகக்கோப்பை தொடர் என்பதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த படி போர்ச்சுகல் அணியால் இந்த தொடரில் மேலும் நீடிக்க முடியவில்லை. ரொனால்டோ, மொரோக்கோவிற்கு எதிரான […]
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கேமரூன் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது சுவிட்சர்லாந்து அணி. FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கேமரூன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றது. கத்தார் நாட்டில் 2022 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2022 FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரூப் ஜி-யில் இடம்பெற்றுள்ள சுவிட்சர்லாந்து மற்றும் கேமரூன் அணிகள் […]
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை அரசு கேபிள் டிவியில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம் என அமைச்சர் அறிவிப்பு. கால்பந்து ரசிகர்களுக்கு திருவிழாவாக விளங்கும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த 20–ஆம் தேதி தொடங்கியது. இந்த முறை 2022 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை தனியார் கேபிள் சேனல், டிஸ் மற்றும் ஜியோ சினிமா உள்ளிட்ட ஒரு சில செயலிகளில் நேரலையாக ஒளிபரப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு […]
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் பெயரில் சென்னை முழுவதும் கால்பந்தாட்ட போட்டியை தமிழக பாஜக நடத்த உள்ளது. – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. சென்னை அரசு மருத்துவமனையில் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் ஓர் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து பிரியா குடும்பத்திற்கு அரசு வேண்டிய உதவிகளை செய்ததோடு, சம்பந்தப்பட்ட 2 அரசு மருத்துவர்களை சஸ்பெண்ட் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏற்கனவே, தமிழக முதல்வர்கள், திமுக அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள் பிரியாவின் குடும்பத்திற்கு […]
முதன்முறையாக,FIFA உலகக் கோப்பைக்கான கால்பந்து போட்டியை மூன்று வெவ்வேறு நாடுகள் நடத்துகின்றன.அதன்படி,2026 உலகக் கோப்பைக்கான போட்டிகள் 11 அமெரிக்க நகரங்களிலும், மெக்ஸிகோவில் உள்ள மூன்று ஹோஸ்ட் தளங்களிலும்,கனடாவில் இரண்டு இடங்களிலும் நடைபெறும் என்றும்,இதில் 48 அணிகள் பங்கேற்கின்றன எனவும் சர்வதேச கால்பந்து குழு (FIFA) அறிவித்துள்ளது. அதன்படி,அட்லாண்டா,பாஸ்டன்,மெக்ஸிகோ சிட்டி, மியாமி, டல்லாஸ்,குவாடலஜாரா,ஹூஸ்டன்,சான் பிரான்சிஸ்கோ,கன்சாஸ் சிட்டி,லாஸ் ஏஞ்சல்ஸ்,மான்டேரி,நியூயார்க்/நியூ ஜெர்சி,பிலடெல்பியா, சியாட்டில்,டொராண்டோ மற்றும் வான்கூவர் என மொத்தம் 16 ஹோஸ்ட் நகரங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. Your #FIFAWorldCup 2026 Host […]
லியோனல் மெஸ்ஸியை நாம் இப்போது அவரை ரசிக்க வேண்டும்.ஒருவருக்கு வயதாகிறது, அது சாதாரணமானது என்று நான் நினைக்கிறேன்.என்ன நடக்கப் போகிறது என்று நினைப்பது வீண்-லியோனல் ஸ்கலோனி. அர்ஜென்டினா கால்பந்து ரசிகர்கள் தங்களால் இயன்ற வரையில் லியோனல் மெஸ்ஸியை ரசிக்க வேண்டும்,அவர் ஏழு முறை பலோன் டி’ஓர் வென்றவர், இந்த ஆண்டு கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவாரா என்று கவலைப்படுவதை நிறுத்துங்கள் என்று பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி கூறினார். “நாம் இப்போது […]
இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்) கோப்பைக்கான கால்பந்து போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் கேரளா பிளாஸ்டர்ஸை வீழ்த்தி ஹைதராபாத் எஃப்சி தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இரு அணிகள் மோதல்: கோவாவில் உள்ள ஃபடோர்டா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஐஎஸ்எல் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர் மற்றும் ஹைதராபாத் எஃப்சி அணிகள் மோதின. முதல் பாதியில் கோல் ஏதும் இல்லாத நிலையில் 69-வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு ராகுல் கேபி அசத்தலான கோல் […]
கேரளா மாநிலம்,மலப்புரத்தின் பூங்கோட்டில் நேற்று இரவு கால்பந்து போட்டி நடைபெற்றது.இந்த போட்டியின் போது பார்வையாளர்கள் அமர தற்காலிகமாக அமைக்கப்பட்ட கேலரி சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து,காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எனினும்,அவர்கள் யாரும் சீரியஸாக இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,இந்த சம்பவம் தொடர்பாக,உள்ளூர் காவல்துறையினர் கூறுகையில்:”இரண்டு உள்ளூர் அணிகளுக்கு இடையிலான செவன்ஸ் இறுதிப் போட்டி நேற்று இரவு 9 மணியளவில் நடைபெற்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளதுமேலும்,இந்த விபத்தில் 5 பேர் பலத்த காயம் அடைந்ததாகவும்,சுமார் […]
தனது மனுக்கும் கால்பந்து பயிற்சி அளித்து வரும் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக வலம் வருபவர் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 36 வயதான இவர் கால்பந்து விளையாட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். கால்பந்தின் சிறந்த விருதான பலோன் டி’ஆர் ( தங்க கால்பந்து கோப்பை) விருதை 5 முறை வென்றுள்ளார். போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனாகவும், மான்செஸ்டர் யுனைடட் அணியின் முன்னணி வீரராகவும் […]
அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி. அர்ஜென்டினாவை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அணியில் உள்ள மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளதாக PSG கால்பந்து க்ளப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள லியோனல் மெஸ்ஸி மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி வீட்டு தனிமையில் உள்ளதாக கூறப்படுகிறது. Tests carried out during the winter break and before the resumption of […]
தலிபான்கள் ஆட்சியில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஆப்கான் மகளிர் கால்பந்து அணி பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் மற்றும் நாட்டிலிருந்த பிற நாட்டு மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வந்தனர். தற்போதும் ஆப்கானிஸ்தானில் இருக்கக்கூடிய பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், பலரும் இதற்காக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள அந்நாட்டின் மகளிர் கால்பந்து அணியினர் தற்போது பாகிஸ்தானில் தஞ்சம் […]
தாய் கரடி மற்றும் அதன் குட்டி இரண்டும் இணைந்து கால்பந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலத்தில் உள்ள நப்ரங்பூர் மாவட்டத்தில் இருக்கும் காட்டுப்பகுதியில் தாய் மற்றும் அதன் குட்டி கரடி இணைந்து கால்பந்து விளையாடும் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அம்மாவட்டத்தின் உமர்கோட் பகுதியில் சிறுவர்கள் சிலர் கால்பந்து விளையாடி கொண்டிருந்துள்ளனர். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக பந்து காட்டு பகுதிக்குள் சென்று விழுந்துள்ளது. அப்போது அங்கிருந்த இரண்டு கரடிகள் பந்தை பார்த்தவுடன் […]
பூனையை காப்பாற்ற அமெரிக்க கொடியை பயன்படுத்திய கல்லூரி கால்பந்து ரசிகர்கள் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சனிக்கிழமை அன்று நடந்த 22 ஆம் எண் மியாமி மற்றும் அப்பலாச்சியன் ஸ்டேட் இடையேயான கால்பந்து ஆட்டத்தின் போது அனைவராலும் கவரப்பட்ட கேட்ச் ஒன்று நடந்தது. அது மைதானத்தில் நிகழவில்லை மாறாக அங்குள்ள ஸ்டேடியத்தில் நிகழ்ந்தது. ஹார்ட் ராக் ஸ்டேடியத்தில் ஒரு பூனை ஒன்று நுழைந்துள்ளது. பின்னர் மேல் தளத்தின் முகப்பில் இருந்து அது கீழே விழும் நிலைக்கு […]
உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் பொலிவியாவுக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்ததன் மூலம் பிரேசில் ஜாம்பவான் பெலேயின் சாதனையை லியோனல் மெஸ்ஸி முறியடித்துள்ளார். பார்சிலோனா (Barcelona) கால்பந்து அணிக்காக ஆடி வந்த நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, சமீபத்தில் அந்த அணியில் இருந்து விலகி,பாரிஸ் செய்ண்ட் ஜெர்மன்(PSG) அணியில் இணைந்துள்ளார். அவருக்கான ஆண்டு ஊதியமாக சுமார் ரூ.200 கோடி பேசப்பட்டு, முதற்கட்டமாக 2 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதற்கிடையில்,அடுத்த் ஆண்டு நடைபெறவுள்ள FIFA கால்பந்து உலக […]
போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு இத்தாலியின் ஜூவண்டஸ் கால்பந்து அணியில் இணைந்து விளையாடி வந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ,சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் மேன்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார். அதன்படி,யுனைடெட் அணியில் இரண்டு ஆண்டுகளுக்கு விளையாட ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. முன்னதாக,ரொனால்டோ 2003 ஆம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை மேன்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடினார்.அதன்பின்னர் கடந்த 2018 ஆம் […]
இந்திய அளவில் கால்பந்து போட்டிக்கு தேர்வான எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மகன் இன்பநிதி ஸ்டாலின். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சியை சிறப்பாக செய்து வருபவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இவரது மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஆக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும், எம்.எல்.ஏ. மற்றும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மகன் இன்பநிதி ஸ்டாலின் தற்போது இந்திய அளவு கால்பந்து போட்டியில் தேர்வாகியுள்ளார். […]
மெஸ்ஸி பிரி என்ற பீடி பாக்கெட்டில் லியோனல் மெஸ்ஸியின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதால் இது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசிலை தோற்கடித்து வெற்றியை பெற்றுள்ளார். இவர் ஆறு முறை பலூன் டி’ஆர் என்ற விருதை பெற்றவர். இந்த நட்சத்திர வீரருக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இதற்கு மத்தியில் மெஸ்ஸியின் புகைப்படத்துடன் ஒரு பீடி பாக்கெட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து […]
யூரோ 2020 கால்பந்து தொடரில் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல்டன் பூட் என்ற தங்க காலணி விருதை வென்றுள்ளார். யூரோ 2020 கால்பந்து தொடரில் அதிக கோல்களை அடித்ததால் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கோல்டன் பூட் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. யூரோ போட்டிகளில் முதன் முறையாக கோல்டன் பூட் விருதை ரொனால்டோ பெறுகிறார். இவர் யூரோ கால்பந்து தொடரில் ஒவ்வொரு தொடரிலும் ஒரு கோல் அடித்திருந்தார். மேலும், ஹங்கேரி மற்றும் பிரான்சுக்கு எதிராக […]