வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

Extension of time for filing an income tax return

கடந்த 2020 – 2021ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் கொரோனா பரவல் காரணமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையின் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”கடந்த 2020 – 21ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம்  நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன் விபரம் பின்வருமாறு:

அதன்படி,கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக தனிநபர் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு,தணிக்கை தேவைப்படாத தனி நபர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர், ‘ஐ.டி.ஆர் – 1 அல்லது ஐ.டி.ஆர் – 4’ படிவங்களில், ஆண்டுதோறும்,ஜூலை 31 ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.

வருமானத்திற்குத் தணிக்கை தேவைப்படும் நிறுவனங்களுக்கு,வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்,நிறுவனங்கள் அதன் ஊழியர்களுக்கு வருமான வரிப்பிடித்தம் தொடர்பான, ‘படிவம் 16’-ஐ ஜூலை 15 ஆம் தேதிக்குள் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,வருமான வரி கணக்கை காலதாமதமாக தாக்கல் செய்வதற்கான கால அவகாசம், 2022 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!