தினமும் காலையில் இதை செய்யுங்கள், விரும்பிய உடல் அழகு பெறலாம்!

Drinking Dumbledore Aloe Vera in the morning can show a good change in body weight and a healthy body beauty

தற்போதைய நவீன காலத்தில் ஆண்கள் பெண்கள் இருவருமே தாங்கள் லேசாக உடல் எடை கூடிவிட்டால் குண்டாக இருக்கிறோம், நக்கல் அடிப்பார்களோ என்ற அச்சத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு செயற்கை முறையை தேடி ஓடுகிறார்கள். சிலர் ஜிம் சென்று உடற்பயிற்சி மூலமாக உடல் எடையை குறைக்கிறார்கள். ஆனால் அப்படி எல்லாம் என்னால் வெளியில் செல்ல முடியாது வீட்டிலிருந்தே என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்கு ஒரு சூப்பரான ஐடியா இருக்கிறது என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்.

உடல் எடை குறைக்க வழி

தினமும் காலையில் ஒரு டம்ளர் கற்றாழை பானம் குடித்து வந்தால் ஒரு மாதத்துக்கு முன்பாகவே உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிவதுடன் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான உடல் அழகைப் பெறலாம். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கற்றாலை ஜெல்

எலுமிச்சை

தேன்

இஞ்சி

உப்பு

செய்முறை

முதலில் எலுமிச்சம் பழத்திலிருந்து சாறு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் அதன்பின் இஞ்சியையும் தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸி எடுத்துக்கொண்டு அதில் எலுமிச்சை சாறு தேன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின் வடிகட்டியதை மிக்ஸியில் மீண்டும் ஊற்றி அதனுடன் கற்றாழை ஜெல் எடுத்து அதையும் அதனுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். பின் அந்த சாறை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஒரு கிளாஸ் தினமும் காலை வேளையில் குடித்து வரும் பொழுது விரும்பியதை விட அதிக அளவிலேயே நாம் உடல் எடையை குறைத்து அழகிய பளபளப்பான சருமத்தைப் பெறலாம்.