நிகழ்ச்சியின் நடுவே சரிந்து விழுந்த நடன கலைஞர் மாரடைப்பால் மரணம்!!

ஜம்முவில் ஒரு நிகழ்ச்சியின் போது நடன கலைஞர் ஒருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 20 வயதான யோகேஷ் குப்தா என்ற நடன கலைஞர்,

ஜம்முவில் ஒரு நிகழ்ச்சியின் போது நடன கலைஞர் ஒருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 20 வயதான யோகேஷ் குப்தா என்ற நடன கலைஞர், பார்வதி தேவியின் வேடமிட்டு, பிஷ்னாவில் உள்ள கணேஷ் உற்சவத்தில் நடனமாடி கொண்டிருந்தார்.

unknown node

வீடியோவில், அவர் உற்சாகமான அசைவுகளுடன் நடனமாடுவதைக் காணலாம். மேலும் நடிப்பின் ஒரு பகுதியாக தரையில் விழுந்தார். சில வினாடிகளுக்குப் பிறகு, அவர் மெதுவாக சரிந்து மீண்டும் தரையில் விழுந்தார். ஆனால் அதன்பிறகு அவர் எழுந்திருக்கவில்லை.

சிவபெருமான் உடையணிந்த மற்றொரு கலைஞன் மேடைக்கு வந்து அவரைச் சோதித்த பிறகுதான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை உணர்ந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உரியிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.