பெங்களூருவில் ஒரு பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்ட போது 67 வயதான தொழிலதிபர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை அந்த பெண், தனது கணவர் மற்றும் சகோதரன் உதவியுடன் அப்புறப்படுத்தியுள்ளார். பெங்களூருவை சேர்ந்த 67 வயதான பாலசுப்ரமணியம் எனும் தொழிலதிபர் தன்னுடைய வீட்டில் வெளியில் செல்வதாக கூறிவிட்டு, ஒரு பெண்ணுடன் ஒரு வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளார். அந்த சமயம் பாலசுப்ரமணியத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து பதறிய அந்த பெண், உயிரிழந்த பாலசுப்ரமணியன் உடலை போலீசுக்கு பயந்து […]
தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா காலமானார். தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா, ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் பல்வேறு மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட மொழிகளில் நடித்துள்ள நிலையில், இவர் பத்ம […]
கலை இயக்குனர் சந்தானம் மாரடைப்பால் காலமானார். ஆயிரத்தில் ஒருவன், இறுதி சுற்று, சர்கார், தர்பார், தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிய சந்தானம் மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜம்முவில் ஒரு நிகழ்ச்சியின் போது நடன கலைஞர் ஒருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 20 வயதான யோகேஷ் குப்தா என்ற நடன கலைஞர், பார்வதி தேவியின் வேடமிட்டு, பிஷ்னாவில் உள்ள கணேஷ் உற்சவத்தில் நடனமாடி கொண்டிருந்தார். pic.twitter.com/FGPxQvWHit — Narendra nath mishra (@iamnarendranath) September 8, 2022 வீடியோவில், அவர் உற்சாகமான அசைவுகளுடன் நடனமாடுவதைக் காணலாம். மேலும் நடிப்பின் ஒரு பகுதியாக தரையில் விழுந்தார். சில வினாடிகளுக்குப் பிறகு, அவர் […]
ஐதராபாத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பு காரணமாக மென்பொருள் பொறியாளர் மரணம் குஜராத்தைச் சேர்ந்த துஷார்(32), சன் சிட்டி எஸ்பிஐ மைதானத்தில் நேற்று(ஆகஸ்ட் 10) கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் […]
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் கேகே உடலுக்கு கையெடுத்து கும்பிட்டு அஞ்சலி செலுத்தி உள்ளார். பிரபல பாலிவுட் பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த பாடகர் கேகேவுக்கு மேற்கு வங்க முதல்வர் அவரை கவுரவிக்கும் வகையில் கொல்கத்தா விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டு முழங்க […]
சிவசேனா கட்சியை சேர்ந்த ரமேஷ் லட்கே எம்எல்ஏ விடுமுறைக்காக தனது குடும்பத்துடன் துபாய் சென்று இருந்த போது மாரடைப்பால் மரணம். மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சிவசேனா கட்சியை சேர்ந்த ரமேஷ் லட்கே எம்எல்ஏ விடுமுறைக்காக தனது குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார். அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக கூறப்படுகிறது. அவரது குடும்பத்தினர் ஷாப்பிங் சென்று இருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு புதன்கிழமை […]
நெதர்லாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பருமான ரியான் காம்ப்பெல்லுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து லண்டனில் உள்ள ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 50 வயதான ரியான் சனிக்கிழமை தனது குடும்பத்துடன் வெளியில் சென்றிருந்தபோது அவருக்கு நெஞ்சுவலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றதாகவும்,இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. Netherlands men’s cricket coach Ryan Campbell in ICU after heart attack Read […]
பெங்களூரு பைப்பனஹள்ளியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் சனிக்கிழமை காலை 8 மணியளவில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பால் இறந்தார். அந்த பெண் ஜிஎம் பால்யாவில் வசிக்கும் வினயா விட்டல் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் மல்லேஸ்பிளையாவில் உள்ள சேலஞ்ச் ஹெல்த் கிளப்பில் பணிபுரிந்து வந்தார்.வழக்கமான தனது உடற்பயிற்சியினை செய்யும் பொழுது மாரடைப்பால் பெண் சரிந்து விழும் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பப்ளிக் ஸ்பாட் என்ற யூடியூப் சேனலால் பகிரப்பட்ட […]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே தொடுக்கப்பட்ட வழக்கு காரணமாக 3 ஆண்டுகளாக ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடைபெறாமல் இருந்த நிலையில்,நேற்று முதல் ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விசாரணையின்போது மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுப்பு தெரிவித்ததாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் பாபு மனோகர் திடீர் தகவலை தெரிவித்தார். குறிப்பாக,தனக்கு தினமும் 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறிய ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுப்பு தெரிவித்ததாகவும், […]
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே. இவருக்கு வயது 52. இவர் தாய்லாந்தில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உயிரிழந்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் மிக சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். சிட்னியில் இந்திய அணிக்கு எதிராக 1992-ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, இதுவரை 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 15 ஆண்டுகளாக […]
பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்த சிவசங்கர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து, கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்குதுட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் கொரோனா தொற்று காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மேலும் அவரது மனைவி, மூத்தமகன் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கும் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு […]
சேலத்தில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகனான வீரபாண்டி ராஜா மாரடைப்பு காரணமாக காலமானார். சேலத்தில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகனான வீரபாண்டி ராஜா மாரடைப்பு காரணமாக காலமானார். இவர், தனது பிறந்தநாளான இன்று தனது தந்தையின் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக சென்ற போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிந்துள்ளார். பிறந்தநாளன்று உயிரிழந்த ராஜா, திமுக தேர்தல் பணிக்குழுவின் செயலாளராக இருந்துள்ளார். மேலும், சேலம் கிழக்கு மாவட்ட திமுக முன்னாள் […]
பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் தனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்குக்கு நேற்று நெஞ்சு வலி ஏற்பட்ததாகவும்,இதனால்,ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சை செய்யப்பட்டு நலமாக உள்ளதாகவும் கூறப்பட்டது.மேலும்,இன்சமாம் தற்போது தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் தகவல் வெளியாகின. இந்நிலையில்,இன்சமாம் உல் ஹக் தனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும், வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவரிடம் சென்றதாகவும் தெரவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது யூ-டியூப் பக்கத்தில் கூறியதாவது: “எனது ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்ததற்காக பாகிஸ்தானிலும் […]
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்குக்கு ஆஞ்சியோபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், பேட்டிங் வீரருமான இன்சமாம் உல் ஹக்குக்கு கடந்த மூன்று நாட்களாக நெஞ்சு வலி இருந்தது.இதனால், லாகூரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட பரிசோதனையில் ஏதும் தெரியவில்லை.இதனையடுத்து, மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து,மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து,51 வயதான இன்சமாம்க்கு,ஆஞ்சியோபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது நலமாக உள்ளதாக கூறப்படுகிறது. […]
ஓபிஎஸ் மனைவியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ஈபிஎஸ். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலக்ஷ்மி அவர்கள், கடந்த இரண்டு வாரங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், அவர் சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று காலை மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மருத்துவமனைக்கு சென்று, ஓபிஎஸ் மனைவி விஜயலக்ஷ்மி உடலுக்கு மரியாதை […]