சத்தமின்றி போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு விலையை உயர்த்திய VI.. எவ்வளவு தெரியுமா??

VI increased their postpaid plan of 50 rs. i.e, rs.598 will now cost rs.649, while rs.749 plan will be offered at rs.799 per month.

தொலைத்தொடர்பு நிறுவனமாக VI, தனது 2 வகையான போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு 50 ருபாய் விலை உயர்த்தியுள்ளது.

இந்தியாவில் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான VI தனது போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த திட்டங்களுக்கு தற்பொழுது 50 ருபாய் உயர்த்தியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் தரப்பில் வெளியான தகவலின்படி, ரூ.598 திட்டம் இப்போது ரூ.649-க்கும், ரூ.749 திட்டத்தின் விலை ரூ.799 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, தற்பொழுது முதல் அமலுக்கு வந்துள்ளது.

முதலில் ரூ.649 திட்டமானது, அன்லிமிடெட் கால்ஸ், 80 ஜிபி டேட்டா மற்றும் நாளுக்கு 100 இலவச SMS வரை அனுப்பலாம். அதுமட்டுமின்றி, இந்த திட்டத்தில் 1 வருட அமேசான் ப்ரைம், ஜீ-5 மற்றும் வி மூவிஸ் & டிவி இலவச சந்தாவையும் வழங்குகிறது. மற்றொரு திட்டமாம் ரூ.799-ல் அன்லிமிடெட் கால்ஸ், 120 ஜிபி டேட்டா மற்றும் நாளுக்கு 100 இலவச SMS வரை அனுப்பலாம். மேலும், 1 வருட அமேசான் ப்ரைம், ஜீ-5 மற்றும் வி மூவிஸ் & டிவி இலவச சந்தாவையும் வழங்குகிறது.

இதனைதொடர்ந்து ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள், தங்களின் போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கும் விலையை உயர்த்த அதிகளவில் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.