ரூ.148, ரூ.149 விலையில் அதிரடி சலுகைகளை அறிவித்த VI!

Telecommunications company VI has introduced two new prepaid plans at Rs 148 and Rs 149 respectively. This is very useful to users.

தொலைதொடர்பு நிறுவனமான VI, புதிய பெயர்களை ஈர்ப்பதற்காக புதிதாக ரூ.148 மற்றும் ரூ.149 என இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

தொலைதொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான VI, தனது வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும், தங்களின் பயனர்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது. இதில் VI தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிதாய் ரூ.148 மற்றும் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம், மாதந்தோறும் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு சிறந்த தேர்வாகும்.

ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்:

இந்த திட்டம், மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் மொத்தம் 3 ஜிபி டேட்டா + பிரீ கால்ஸ், விஐ மூவி, டிவிகாண இலவச சந்தா, 100 எஸ்.எம்.எஸ். சேவைகளை வழங்குகிறது. இந்த திட்டம், குறிப்பாக கால் மற்றும் எஸ்.எம்.எஸ். பயனர்களுக்கு சிறப்பாக அமையும்.

ரூ.148 ப்ரீபெய்ட் திட்டம்:

இதற்கும், ரூ.149 திட்டத்திற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். அந்த திட்டங்கள் 28 நாட்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், இதில் 18 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.இந்த திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டா என மொத்தம் 18 ஜிபி டேட்டா வழங்குகிறது. அதோடு தினசரி 100 எஸ்எம்எஸ், 18 நாட்களுக்கு அன்லிமிடெட் கால் சேவை வழங்கப்படுகிறது.