வாட்ஸ்அப்பில் மெசேஜ் ஒருமுறை பார்த்தவுடன் அழியும் புதிய வசதி சோதனை! வெளியான தகவல்.!
மெசேஜ் சாட்டில் ஒருமுறை பார்த்தவுடன் அழியும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் சோதனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் சாட்டில் மெசேஜ் ஒருமுறை பார்த்தவுடன் தானாக அழியும் “வியூ ஒன்ஸ்”(View Once) எனும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே போட்டோ மற்றும் வீடியோ களுக்கு இந்த வியூ ஒன்ஸ் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது சாட்(மெசேஜ்)களுக்கு இந்த அம்சத்தை அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது.
இதன்மூலம் மெசேஜ் களை ஸ்கிரீன் ஷாட் எடுக்கவோ, நகலெடுத்து யாருக்கும் அனுப்பவோ முடியாது. மேலும் மெசேஜ் அனுப்பிவிட்டு பிறகு அளிக்க வேண்டிய அவசியமும் இருக்காது. இதனால் ஒருவருக்கொருவர் ரகசியமாக மெசேஜ்களை அனுப்பிக்கொள்ளமுடியும். தற்போது இந்த அம்சம் சோதனையில் இருப்பதாகவும், சில மாறுதல்களுடன் இந்த அப்டேட் விரைவில் பயனர்களுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.