Whatsapp pay: இனி வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பலாம்.. அது எப்படி?

WhatsApp has enabled payments in India. Here's how you can get started to facilitate money transfer and receive money.

வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதி அண்மையில் வெளியான நிலையில், அதனை எப்படி அனுப்பலாம் என்பது குறித்து காணலாம்.

உலகளவில் வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், புதிதாக பல அம்சங்களை வழங்கி வருகிறது. அதன்படி, தற்போது வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. UPI அடிப்படையிலான கட்டண முறையான வாட்ஸ்அப் பே அம்சத்தை இந்தியாவில் தொடங்க இந்திய தேசிய கட்டணம் கழகம் (NPCI) ஒப்புதல் அளித்துள்ளது.

ஆனால் இந்த அம்சத்தை உபயோகிக்க, 20 மில்லியன் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, உங்களின் வாட்ஸ்அப் மூலம் உங்களின் நண்பருக்கு வாட்ஸ்அப் வழியாகவே எளிதாக பணம் பரிவர்த்தனை செய்யலாம். இந்த வாட்ஸ்அப் பே வசதியை ஆண்ட்ராய்டு, iOS பயனர்களுக்கு, 10 இந்திய மொழிகளில் கிடைக்கும்.

வாட்ஸ்அப் பே மூலம் பணம் அனுப்பும் முறைகள்:

நீங்க யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ, அவரின் சாட்க்குள் செல்லவும்.

பின் சாட் பாக்ஸில் பின் (pin) ஐகான் இருக்கும். அதனை தேர்வு செய்து, பெமென்ட் (payment) ஐகானை தேர்வு செய்யவும்.

அதன்பின் எவ்வளவு பணம் அனுப்புகிறீர்கள் என்பதை என்டர் செய்து, உங்களின் UPI ஐடியை பதிவு செய்யவும்.

பணம் சென்றடைந்தால், உங்களின் சாட்-ல் நீங்கள் அனுப்பிய தொகை சென்றடைந்தது என்பது போல ஒரு குட்டி காலம் (column) தெரியும்.