பேஸ்புக் லாகின் விவரங்களை திருடும் 25 செயலிகள்.. நீக்கிய கூகுள் நிறுவனம்!

பயனர்களின் பேஸ்புக் லாகின் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 25 ஆண்ட்ராய்டு செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்.

பயனர்களின் பேஸ்புக் லாகின் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 25 ஆண்ட்ராய்டு செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்.

பயனர்களின் பேஸ்புக் லாகின் விவரங்களைத் திருடுவதாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான எவினா, கூகுள் நிறுவனத்திடம் எச்சரித்துள்ளது. இந்த செயலிகள் மூலம் பயனர்களின் பேஸ்புக் ஐடியை லாகின் செய்யும்போது அவர்களின் உள்நுழைவு சார்ந்த விவரங்களைப் பதிவு செய்வதாகவும் தெரிவித்தது.

அதன்படி, லாகின் விபரங்கள் திருடப்படுவதாக 25 ஆண்ட்ராய்டு செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. அந்த 25 செயலிகளானது,

Super Wallpapers Flashlight

Padenatef

Wallpaper Level

Contour level wallpaper

Iplayer & iwallpaper

Video maker

Color Wallpapers

Pedometer

Powerful Flashlight

Super Bright Flashlight

Super Flashlight

Solitaire

Accurate scanning of QR code

Classic card game

Junk file cleaning

Synthetic Z

File Manager

Composite Z

Screenshot capture

Daily Horoscope Wallpapers

Wuxia Reader

Plus Weather

Anime Live Wallpaper

iHealth step counter

Com.tyapp.fiction

இவற்றில், Super Wallpapers, Flashlight மற்றும் Padenatef செயலிகளை 500,000 மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதில் பெரும்பாலான செயலிகள், 100,000 மக்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.