ஒரு தெருவை 360 டிகிரியில் பார்த்துக்கொள்ள முடியும் அளவுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் மேப் நிறுவனம்.
முன்பெல்லாம், தெரியாத ஒரு ஊருக்கோ, தெருவுக்கோ செல்ல வழி தெரிந்த நபர்களிடம் வழி கேட்டு செல்வோம், ஆனால், தற்போதெல்லாம், ஒரு ஸ்மார்ட் ஃபோன் மற்றும், ஒரு கூகுள் மேப் அப்பிளிக்கேஷன் போதும் என்கிற நிலைமை வந்து வருடங்கள் உருண்டோடிவிட்டன.
அதனை அவ்வப்போது மெருகேற்றி கொண்டே கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. மருத்துவமனை, பெட்ரோல் பங்க், தியேட்டர், முக்கிய வழிபட்டு தளங்கள், உணவகம், டாய்லட் என சகல வசதியும் இருக்கிறது.
தற்போது புதிய வசதியாக, ஒரு தெருவை 360 டிகிரியில் பார்த்துக்கொள்ள முடியும் அளவுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் சோதனை முயற்சியாக இந்தியாவில், பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை, ஹைதராபாத், புனே, நாசிக், வதோதரா, அகமதுநகர் மற்றும் அமிர்தசரஸ் ஆகிய நகரங்களில் அப்டேட் செய்யப்பட்டு உள்ளதாம்.
இதனை கூகுள் மேப் நிறுவனம், டெக் மஹிந்திரா மற்றும் ஜெனிசிஸ் உடன் இணைந்து ஸ்ட்ரீட் வியூ சேவையை 10 இந்திய நகரங்களில் அறிமுகப்படுத்தியது.