ஜியோ 4ஜி வோல்ட் போன் அம்சங்கள்.!

மிகவும் சிறப்பான சலுகைகள் மூலம் இந்திய தொலைத் தொடர்பு சந்தையை ஆக்கிரமித்துள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் இலவசங்கள் மற்றும் மிகவும் மலிவான விலை நிர்ணயம்

unknown node

மிகவும் சிறப்பான சலுகைகள் மூலம் இந்திய தொலைத் தொடர்பு சந்தையை ஆக்கிரமித்துள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் இலவசங்கள் மற்றும் மிகவும் மலிவான விலை நிர்ணயம் ஆகிய விற்பனை புள்ளிகளால் தொடர்ந்து வாடிக்கையாளர் ஈர்த்துவரும் நிலைப்பாட்டில், ஜியோ அதன் 4ஜி வோல்ட் அம்சம் கொண்ட மொபைலை மலிவான விலைக்கு அறிமுகம் செய்யவுள்ளதென்ற தகவல் ஆன்லைன் வட்டாரங்களை சுற்றி வந்தன. அதை உறுதி செய்யும் வகையில் தற்போது அக்கருவி சார்ந்த புகைப்படங்களுடன் அதன் விலை நிர்ணயம் மற்றும் அம்சங்கள் சார்ந்த விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன. பலமுறை ஜியோ 4ஜி வோல்ட் போன் சார்ந்த லீக்ஸ் தகவல்கள் வெளியாகி இருந்தாலும் கூட அனைத்திலும் ஒரே மாதிரியான சாதனமே காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் சற்று வேறுபட்டதாக இருப்பதாலேயே இதனை இறுதிநிலை கருவி என்று நம்பலாம்