உத்திர பிரதேசத்தில் கழிவறைக்கு செல்ல அனுமதி கேட்டதற்காக 14 வயது மாணவரை ஆசிரியர் தாக்கியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூரில் கழிவறைக்கு செல்ல அனுமதி கேட்டதற்காக 14 வயது தலித் மாணவரை ஆசிரியர் ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ஆசிரியர் முதலில் அனுமதி மறுத்துள்ளார், இரண்டாவது முறையாக கேட்டபோது, மாணவனை கட்டையால் அடித்தாகவும், அதில் சிறுவன் மயங்கி விழுந்ததாகவும் கூறினர். மேலும் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு SC/ST சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு […]
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த 30 ஆண்டுகளாக கழிவறையில் உணவு தயாரிக்கப்பட்டு வந்ததையடுத்து, உணவகத்தை மூடுமாறு அதிகாரிகள் உத்தரவு. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த 30 ஆண்டுகளாக கழிவறையில் உணவு தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த உணவகத்தில் சமோசா உள்ளிட்ட பிற உணவுகளில் கழிவறையில் தயாரிக்கப்பட்ட செய்தி நகராட்சி அதிகாரிகள் ரகசியமாக கிடைத்ததையடுத்து, அவர்கள் உணவகத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது உணவகத்தின் குளியலறையில் கடந்த 30 ஆண்டுகளாக […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கோரேகன் எனும் பகுதியில் பிரத்தியேகமாக திருநங்கைகளுக்கான முதல் கழிவறை இன்று திறக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சார்தி எனும் அறக்கட்டளை இந்த பொது கழிப்பறை கட்டி உள்ளது. திருநங்கைகளின் வசதிக்காக சில பகுதிகளில் பாலின வேறுபாடு இல்லாத நவீன கழிப்பறைகள் உருவாக்கப்பட்டிருந்தாலும், மகாராஷ்டிராவில் முதல் முறையாக திருநங்கைகளுக்கு அமைக்கப்பட்டுள்ள பொது கழிப்பறை இதுதான் எனது சார்தி அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு பணிக்காக ரூ.36.5 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை. தமிழகத்தில் கிராமப்புறங்களில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் ,கழிப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்தலுக்காக செப்டம்பர் 21 முதல் ஏப்ரல் 22 வரைக்கான நிதியான ரூ.36.50 கோடியை மாநில நிதி ஆணையத்தின் (SFC) மானியத்தை பயன்படுத்த அனுமதி மற்றும் உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும்,காலை மற்றும் மதியம் ஒரு முறை என […]
மொரிஷியஸ் ஏர்பஸ் விமானத்தின் குப்பைத் தொட்டியில் டாய்லெட் பேப்பரால் மூடப்பட்டு கிடந்த பிறந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பட்டது. கடந்த ஜனவரி 1 சனிக்கிழமை அன்று ஏர் மொரீஷியஸ் ஏர்பஸ் ஏ330-900 ரக விமானத்தின் குப்பைத் தொட்டியில் டாய்லெட் பேப்பரில் புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்று இருந்துள்ளது. வழக்கமான சுங்கச் சோதனையின் போது விமானத்தை சோதனை செய்த விமான நிலைய அதிகாரிகள் குழந்தையை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே, விமானத்தில் பிரசவித்ததாக சந்தேகிக்கப்படும் மடகாஸ்கரைச் சேர்ந்த […]
வீடு இல்லாததால் 2 ஆண்டுகளாக கழிவறையில் வாழ்ந்த குடும்பம். தெலங்கானா மாநிலம், மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பாலநகர் மண்டல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா. இவரது கணவர் 7 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததையடுத்து, தனது 2 குழந்தைகள் மற்றும் மாமியாருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பதாக தெலுங்கானாவில் பெய்த கனமழையின் போது அவரது வீடு இடிந்து விழுந்தது. இதன் காரணமாக இவர் அருகில் இருந்த சமுதாய கூடத்தில் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் […]
ஆஸ்திரியா நாட்டில் உள்ள ஒருவர் கழிப்பறையில் அமர்ந்திருக்கும்போது பக்கத்து வீட்டு மலைப்பாம்பு கடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆஸ்திரியாவில் வசிக்கும் 65 வயதான ஒரு நபர் திங்கள்கிழமை காலை தனது வீட்டில் கழிப்பறையில் அமர்ந்திருக்கும்போது பின்னால் ஏதோ கடித்தது போன்று உணர்ந்தார்.பின்னர்,அவர் கழிப்பறைக்குள் பார்த்தபோது , 5 அடி நீளமுள்ள அல்பினோ ரெட்டிகுலேட்டட் என்ற மலைப்பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து,பாம்பை மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்காக மீட்பு துறையினரை அவர் அழைத்தார். மேலும்,இது குறித்து போலீசார் கூறுகையில்,”பக்கத்து […]
கொரோனா நோயாளிகளுக்கு கழிப்பறையில் ஆக்சிஜன் வசதி. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில், கழிவறை செல்லும் கொரோனா நோயாளிகள், ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழப்பதை தவிர்க்க, கழிவறையில் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, […]
பள்ளி குழந்தைகளின் சிரமத்தை கண்டு 30 லட்சம் மதிப்பில் நவீன கழிப்பறை. திரு.சதீஷ் குமார் என்பவர், ஈரோடு மாவட்டம் சித்தோடு என்ற சிறிய கிராமத்தில் பிறந்த வளர்ந்தவர். இவர் தனது பள்ளி படிப்பை முடித்த நிலையில், தனது கடின உழைப்பால் பன்னீர் வணிகத்தில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தார். அதுமட்டுமில்லாமல், பால் வணிகத்தில் ஈடுபட்டு மில்கி மிஸ்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தையும் உருவாக்கினார். இந்நிலையில், அவர் பிறந்த கிராமமான, சித்தோடு தொடக்கப் பள்ளியின் கழிப்பறையின் மிக மோசமான […]
கழிப்பறையில் 7 நாட்கள் தனிமையில் இருந்த 28 வயது இளைஞர். தமிழ்நாட்டிலிருந்து திரும்பி வந்த 28 வயதான இளைஞர் ஒருவர், ஒடிசாவின் ஜகத்சிங்க்பூர் மாவட்டத்தில் உள்ள நிறுவனத்திற்கு சென்றுள்ளார். வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிற நிலையில், அந்த நிறுவனத்தில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதற்கான அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மனஸ் பத்ரா, சுதுகாந்தி பள்ளியில் அரசு நடத்தும் தற்காலிக மருத்துவ முகாமில் (டி.எம்.சி) அனுமதிக்கப்பட்டு ஏழு […]
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு புதூர் அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்த மாணவன், வகுப்பிலேயே மலம் கழித்ததற்காக, பள்ளி ஆசிரியை மாணவனையே, சுத்தம் செய்ய வைத்தார். தற்போது 2-ம் வகுப்பு படிக்கும் மாணவனை மனிதக்கழிவு அள்ள வைத்த ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஒரு சில ஆசிரியர்கள் அவ்வப்போது பள்ளியில் வேலை செய்ய விடுவதும், அல்லது துன்புறுத்துவதும் ஆங்காகே […]
பழனி அருகே கழிப்பிட வசதி இல்லாததால் திறந்தவெளி கழிப்பிடங்களையே கிராம மக்கள் பயன்படுத்தி வரும் அவலம் நீடித்து வருகிறது. இதனால், இப்பகுதி முழுவதும் சுகாதாரம் இன்றி காணப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள ஆயக்குடி ஊராட்சியில் கோமதி தியேட்டர் என்ற பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. பின்னர் இப்பகுதியில் உள்ள வீடுகளில் ஒன்றில் கூட கழிவறைகள் இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது. இந்நிலையில், அங்கு பொதுகழிவறைகள் இல்லாததால், பொதுமக்கள் திறந்தவெளிகளிலேயே கழிக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி […]
மும்பையிலுள்ள பள்ளி ஒன்றில் ஏழு வயது சிறுமியை கழிப்பறைக்குள் அடையாளம் தெரியாத ஒருவரால் பாலியல் வன்கொடுமை. கிரேயன் அல்லது பென்சில் கொண்டு பலத்த தாக்குதலைப் பயன்படுத்தியிருக்கலாம் மருத்துவர் சந்தேகம். மும்பையில் புறநகர் மல்வானியில் உள்ள பள்ளியின் ஏழு வயது சிறுமியை கழிப்பறைக்குள் அடையாளம் தெரியாத ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீசார் அந்த பள்ளிக்கு சென்று கடந்த சனிக்கிழமை தெரிவித்தனர். ஆனால் இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்துருகிறது என்று, புகார் வந்துள்ளது. பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமின் தாயார் அளித்த […]
அமெரிக்காவின் சௌத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் விமானம் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி பிட்ஸ்பெர்கில் இருந்து பொனிக்ஸ் நோக்கி புறப்பட்டது. விமானம் வானத்தில் பறந்து கொண்டிருந்தபோது, இரண்டு விமானிகளில் ஒருவர் கழிவறைக்கு சென்றார். ஒரு விமானி இல்லாத நிலையில், உதவிக்காக விமானத்தில் பணிபுரிந்த ரெனி என்ற பணிப்பெண், காக்பிட்க்குள் சென்றார். அப்பொழுது கட்டுப்பாட்டு அறையில் இருந்த மற்றொரு விமானி கழிப்பறையில் நடக்கும் காட்சிகளை லைவாக பார்த்துக் கொண்டிருந்தார். அந்த பெண்ணை பார்த்து […]
அசாம் மாநிலம் குவஹாத்தி மாநகராட்சி நிறுவ ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.அத்திட்டத்தில் இனிமேல் குவஹாத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் கழிவறைகளை பெண்கள் மற்றும் குழந்தைகள் இலவசமாக பயன்படுத்த வழி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உகந்ததாக மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்தமுடிவை அமல்படுத்த ஹோட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இந்தமுடிவு நட்சத்திர ஹோட்டலுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.