கழிப்பறையில் 7 நாட்கள் தனிமையில் இருந்த 28 வயது இளைஞர்! காரணம் என்ன?

Default Image

கழிப்பறையில் 7 நாட்கள் தனிமையில் இருந்த 28 வயது இளைஞர்.

தமிழ்நாட்டிலிருந்து திரும்பி வந்த 28 வயதான இளைஞர் ஒருவர், ஒடிசாவின் ஜகத்சிங்க்பூர் மாவட்டத்தில் உள்ள நிறுவனத்திற்கு சென்றுள்ளார். வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிற நிலையில், அந்த நிறுவனத்தில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதற்கான அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மனஸ் பத்ரா, சுதுகாந்தி பள்ளியில் அரசு நடத்தும் தற்காலிக மருத்துவ முகாமில் (டி.எம்.சி) அனுமதிக்கப்பட்டு ஏழு நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன்பின், அவர் தனிமையில் இன்னும் ஒரு வாரம் செலவிடுமாறு கூறப்பட்டது.

இந்நிலையில், இவர் அரசாங்கத்தால் நடத்தப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்த போதுமான இடம் இல்லாததால், நுவாகான் தொகுதியில் உள்ள ஜமுகான் கிராமத்தில் உள்ள கழிப்பறைக்குள் 7 நாட்கள் தனது வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை செலவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்