30 வருடங்களாக கழிவறையில் உணவு தயாரிப்பு…! அதிரடியான நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்..!
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த 30 ஆண்டுகளாக கழிவறையில் உணவு தயாரிக்கப்பட்டு வந்ததையடுத்து, உணவகத்தை மூடுமாறு அதிகாரிகள் உத்தரவு.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த 30 ஆண்டுகளாக கழிவறையில் உணவு தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த உணவகத்தில் சமோசா உள்ளிட்ட பிற உணவுகளில் கழிவறையில் தயாரிக்கப்பட்ட செய்தி நகராட்சி அதிகாரிகள் ரகசியமாக கிடைத்ததையடுத்து, அவர்கள் உணவகத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அப்போது உணவகத்தின் குளியலறையில் கடந்த 30 ஆண்டுகளாக சமோசா போன்ற உணவுகள் தயாரித்தது தெரியவந்துள்ளது. மேலும் அந்த உணவகத்தில் காலாவதியான இறைச்சிகள் மற்றும் பாலாடை கட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பூச்சிகளும் எலிகளும் ஓடி விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர்.
சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டு வந்த இந்த உணவகத்தை அதிகாரிகள் உடனடியாக மூடுமாறு உத்தரவிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மற்ற உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்த 26 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.