மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை, எம்பி சு.வெங்கடேசனை போனில் அழைத்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மதுரை, வண்டியூரில் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் வெகு விமர்சையாக தெப்பக்குள விழா நடைபெறும். தை மாத பௌர்ணமி நாளன்று தெப்பக்குள மாரியம்மன் திருவிழா நடைபெறும். அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்பட்டு , தெப்பக்குளத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு […]
கடந்த ஆண்டு மே மாதம் மதுரை மாவட்ட அதிமுக சார்பில் தினமணி திரையரங்கு முன் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமை தாங்கினார். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு” மின்சார கட்டணத்தை உயர்த்த மாட்டோம், நீட் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்படும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாத மாதம் ரூ.1000 கொடுக்கப்படும், மாணவர்களுக்குரிய கல்வி கட்டணத்தை உடனடியாக ரத்து செய்வதாகவும் உள்ளிட்ட […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியுள்ளது. சட்டப்பேரவை கேள்வி நேரத்தில், உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். கடந்த அம்மாவின் ஆட்சியில், எங்கள் மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ரூ.1,296 கோடியில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரை மக்களுக்கு குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. அந்த பணி ஆமை வேகத்தில் நடக்கிறது, தற்போது மதுரையில் சாக்கடை நீர், குடிநீருடன் கலந்து வருகிறது. எனவே மக்களுக்கு 24 மணி நேரமும் சுத்தமான […]
தனித்து போட்டியிடலாம் என எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுக்க உள்ளேன் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி. மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் செல்லூர் ராஜூ, எல்லா கட்சியும் தனித்து நிற்கட்டும். யாருக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். திமுக, தேர்லில் தனித்து நிற்கப் போவதாக சொல்கிறார்கள். ஏன் அதிமுகவும் தனித்து நிற்க கூடாது என எடப்பாடி பழனிசாமி யிடம் கோரிக்கை விடுக்க உள்ளேன். திமுக தேர்தலில் […]
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் விடியா அரசு தடுமாற்றம் என செல்லூர் ராஜூ விமர்சனம். மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ , 2024 மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில் அதிமுக முடிவு செய்யும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் விடியா அரசு தடுமாற்றத்தில் உள்ளது. வருமானவரி, அமலாக்கத்துறை சோதனைக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அஞ்சுகிறார். […]
இது காசுக்காக அழைத்துவரப்பட்ட கூட்டமல்ல, தானா சேர்ந்த கூட்டம் என செல்லூர் ராஜூ பேட்டி. மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக மாவட்ட செயளாலர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை முனிசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுகவிற்கு சரியான எதிரி அதிமுகதான். திமுகவிற்கு அடுத்து நாங்கள்தான் என கூறுபவர்களுக்கு இந்த ஆர்பாட்டம் ஒரு பாடம். இது காசுக்காக அழைத்துவரப்பட்ட கூட்டமல்ல, தானா சேர்ந்த கூட்டம். அதிமுக ஆட்சியில் […]
அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் காசுக்காக விலைபோக மாட்டார்கள் என செல்லூர் ராஜூ பேட்டி. மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செல்லூர் ராஜூ, அதிமுக சாதி ரீதியான கட்சி அல்ல, சாதி அடிப்படையில் புதிதாக பொறுப்பாளர் நியமிக்கப்படவில்லை. அதிமுகவில் சாதி, மதம் பார்ப்பதில்லை. அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் காசுக்காக விலைபோக மாட்டார்கள். ஓ.பன்னீர்செல்வம் ஏட்டிக்கு போட்டியாக செயல்பட கூடாது. பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்போம், எடப்பாடி பழனிசாமியை, ஓபிஎஸ் சந்தித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதிமுக […]
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர்.அந்த வகையில்,மதுரை மாவட்டத்தின் மெரினாவாக இருக்கும் மாரியம்மன் கோயில் தெப்பகுளத்தில் லேசர் ஷோ நடத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ கூறினார்.இதற்கு பதிலளித்த சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள்,தங்களது கோரிக்கை குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என்று […]
கலைஞர் உணவகம் வந்தால் வரவேற்கிறோம்… வாழ்த்துகிறோம் என செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களிடம பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, 2026 சட்டமன்ற தேர்தலில் 150 இடங்களை பெற்று தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும் என என அண்ணாமலை கூறி இருப்பது அவரது ஆசை, விருப்பம். ஒருவரின் ஆசையை நாம் நிராகரிக்க முடியுமா ..? ஆனால் எப்போது தேர்தல் வந்தாலும் தமிழகத்தில் அதிமுக வெற்றிபெறும் என்பதற்கு சான்று இது. பாஜக ஒரு வளர்கின்ற கட்சி, […]
வயதானவர்கள் பேருந்தில் ஏறியபின் கட்டண பேருந்தாக இருந்தால் இறக்கிவிடப்படுகின்றன என செல்லூர் ராஜு பேரவையில் பேச்சு. தமிழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் மகளிர்க்கு கட்டணம் இல்லை என முதல்வர் முக ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சரும், நடப்பு எம்எல்ஏவுமான செல்லூர் ராஜு சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளார். வயதானவர்கள் பேருந்தில் ஏறிய பின் கட்டண பேருந்தாக இருந்தால் இறக்கிவிடப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே, திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் […]
உள்ளாட்சி தேர்தலில் குடிகாரர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்யாதீர்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பின் . அப்போது புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களின் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத இடங்களில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மதுரையில் கட்சி நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய […]
வாக்குறுதியை நிறைவேற்றிய வரலாறு திமுகவுக்கு கிடையாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டி உள்ளார். மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்லூர் ராஜூ, ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் தேர்தல் அலுவலகத்தை இன்று திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சி தலைவர் அறிவித்திருக்க திட்டங்கள், பொதுவாக தேர்தலில் அறிக்கையில் சொன்னவற்றை நிறைவேற்றியதாக திமுகவுக்கு வரலாறு கிடையாது என குற்றசாட்டியுள்ளார். இரண்டு ஏக்கர் நிலம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு, கடைசியில் ஒன்றும் தரவில்லை, […]
இன்று முதல்வர் பழனிசாமிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்பது அவசியம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.பின்னர், 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே சசிகலாவின் விடுதலை குறித்து அவரது வழக்கறினரான ராஜா செந்தூர்பாண்டியனுக்கு சிறை நிர்வாகத்திடம் இருந்து முறைப்படி கடிதம் கிடைத்திருக்கிறது.அந்த கடிதத்தில், ஜனவரி 27-ஆம் தேதி புதன்கிழமை […]
பொங்கல் பரிசு வாங்க முடியாதவர்கள் பண்டிகை முடிந்ததும் பரிசை வாங்கலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் அதில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, திராட்சை, வெல்லம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று அறிவித்தார். ஜனவரி 4-ஆம் தேதி முதல் பொங்கல் […]
ஜனவரி 3-ஆம் தேதி அன்று அழகிரி ஆலோசனை நடத்த உள்ள நிலையில் , அவர் கட்சி தொடங்குவது திமுகவிற்கு பெரிய பாதிப்பாக இருக்கும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,வருங்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன் என்று மு.க.அழகிரி அறிவித்தார்.இந்த ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 3-ஆம் தேதி அன்று மாலை 4 மணியளவில் மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் […]
தெலுங்கானா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு இருந்து வரக்கூடிய வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை அதிகரித்து வந்தது. இந்நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் இன்று முதல் சென்னையில் பசுமைப் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 45 ரூபாய்க்கு […]
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் செல்லூர் பூரண குணமடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது அரசு.இதனிடையே கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்பட்டார். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று குணமடைந்துவிட்டதாக […]
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது அரசு.இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அமைச்சர்கள் அன்பழகன், தங்கமணி ஆகியோர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர் . அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவியும் […]
கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. எகிப்து வெங்காயத்தை முதல்வரே சாப்பிட்டு பரிசோதனை செய்துள்ளார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். வெங்காய விளைச்சல் பாதிப்பு, வேர் அழுகல் நோய் என பல்வேறு காரணங்களால் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அரசு வெங்காய விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் எகிப்து நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.ஆனால் இந்த வெங்காயம் மக்கள் மத்தியில் சிறிது பீதியை ஏற்படுத்தியது. […]
தமிழகத்தின் ஆளுமை மிக்க அரசியல் தலைவர் என்றால் வைகோ என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவரிடம் திமுக தொடர்ந்த வழக்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு அவர் பதில் அளிக்கையில், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராக இல்லை.இதன் காரணமாக அதனுடைய கூட்டணி கட்சிகளையும் தற்போது தூண்டிவிட்டு பல்வேறு வழக்குகளை போட்டு வருகின்றது என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தின் ஆளுமை மிக்க அரசியல் […]