அரசியல் நெறி… மதுரை எம்.பி சு.வெங்கடேசனை போனில் பாராட்டிய செல்லூர் ராஜு.!
மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை, எம்பி சு.வெங்கடேசனை போனில் அழைத்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
மதுரை, வண்டியூரில் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் வெகு விமர்சையாக தெப்பக்குள விழா நடைபெறும். தை மாத பௌர்ணமி நாளன்று தெப்பக்குள மாரியம்மன் திருவிழா நடைபெறும். அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்பட்டு , தெப்பக்குளத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இன்னும் சில நாட்களில் எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக உருவாகும்: ஓபிஎஸ்
இந்த வருடம் ஜனவரி 14ஆம் தேதி திருவிழாவானது ஆரம்பித்து, ஜனவரி 25ஆம் தேதி விழா உற்சவமான தெப்பக்குள தேர் இழுக்கும் நிகழ்வு நடைபெற்று முடிந்தது திருவிழாவை முன்னிட்டு தெப்பக்குளத்தை சுற்றிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இந்த வண்ண விளக்குகளில் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் பார்ப்போரை மிகவும் கவர்ந்தது. இதனால் பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் தெப்பக்குள மாரியம்மன் கோயிலை காணக் குவிந்தனர்.
வண்ண விளக்குகள் ஏற்பாடு செய்தது குறித்து தான் தனது பாராட்டுகளை செல்லூர் ராஜு மதுரை எம்பிக்கு தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம் பி சு வெங்கடேசன் தனது எக்ஸ் சமூக வலைதளபக்கத்தில் பதிவிடுகையில், ” நேற்று மாலை அண்ணன் செல்லூர் ராஜு அவர்கள் தொலைபேசியில் அழைத்தார்.
வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றி உயர்மின் கோபுரம் அமைந்துள்ளது மிகச் சிறப்பாக இருக்கிறது என்று சொல்லி வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்தேன்.
எதிரெதிர் அரசியலில் முகாம்களில் இருந்தாலும், நல்லதை பாராட்டும் அரசியல் நெறியை என்றும் காப்போம்” என்று தெரிவித்துள்ளார் மதுரை மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு வெங்கடேசன்.
நேற்று மாலை அண்ணன் செல்லூர் ராஜு அவர்கள் தொலைபேசியில் அழைத்தார்.
வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றி உயர்மின் கோபுரம் அமைத்துள்ளது மிக சிறப்பாக இருக்கிறது. என்று சொல்லி வாழ்த்துகளை தெரிவித்தார்.
அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்தேன். எதிரெதிர் அரசியல் முகாம்களில்… pic.twitter.com/8TX7NnJ3cq
— Su Venkatesan MP (@SuVe4Madurai) January 29, 2024