சென்னை : அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தன்னம்பிக்கை நிகழ்ச்சியில், பேச்சாளர் மகா விஷ்ணு ஆன்மீகம், முன்ஜென்மம் பற்றிய சர்ச்சை கருத்துக்களையும், மாற்றுத்திறனாளிகள் குறித்து கடுமையான கருத்துக்களையும் பேசியிருந்தார். இதனை எதிர்த்து கேள்வி எழுப்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் மகா விஷ்ணு விமர்சனம் செய்திருந்தார். மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த மாகா விஷ்ணு பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு […]
சென்னை : அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி என்ற பெயரில் ஆன்மீகம், முன்ஜென்மம் பற்றியும், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சை கருத்துக்களையும் மகா விஷ்ணு என்பவர் பேசியிருந்தார். இதனை எதிர்த்து கேள்வி எழுப்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் மகா விஷ்ணு கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் மகா விஷ்ணு மீது புகார் அளித்திருந்தார். இப்புகாரின் பெயரில் மகா விஷ்ணுவை கடந்த 7ஆம் தேதி சென்னை விமான […]
நடிகர் மகாகாந்தி தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் நடிகர் விஜய் சேதுபதிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன். பெங்களூரு விமான நிலைய சம்பவம் தொடர்பான அவதூறு வழக்கில் நடிகர் விஜய் சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் மகா காந்தி என்பவர் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில், ஜனவரி 4 -ஆம் தேதி ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதாக […]
யூடிபர் மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி. யூ-டியூபர் மதன்,பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் வீடியோ கேம்களை லைவ்வாக விளையாடி யூ-டியூபில் பதிவேற்றம் செய்து வந்தார். பின்னர்,இந்த வீடியோக்களானது, வீடியோ கேம் பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, மதன் பிரபலமானார். இந்நிலையில், பெண்கள் குறித்து ஆபாசமாக அநாகரிகமான முறையில் பேசியதையடுத்து, இவர் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து, யூ-டியூபர் மதன் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக மதனை விசாரணைக்கு […]
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆஜர். அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் துணை நடிகை சாந்தினி போலீசில் புகார் தெரிவித்திருந்தார். முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்து […]