பெங்களூரு : சந்திரயான்-1 இயக்குநராக பணியாற்றிய முன்னாள் இந்திய விஞ்ஞானி ஸ்ரீனிவாஸ் ஹெக்டே (71) பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுநீரக செயலிழப்பு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். யார் இந்த ஸ்ரீநிவாஸ் ஹெக்டே நிலவின் ரகசியங்களை ஆராய்வதற்காக இந்தியாவின் ISRO சார்பில், முதன்முதலாக சந்திரயான்-1 திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கான பணிகள், 22 […]
குவைத்தின் மன்னர் ஷேக் நவாப் அல் அகமது அல் சபா தனது 86-வது வயதில் காலமானார். ஷேக் நவாப் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் ஒரு வாரத்துக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத தொடர்ந்து இன்று உயிரிழந்தார். இவரது மரண செய்தியை அறிவிப்பதற்கு முன்பதாக குவைத் அரசு தொலைக்காட்சி குர்ஆன் வாசகங்கள் வாசிக்கப்பட்டன என தகவல் வெளியாகி உள்ளது. இதைதொடர்ந்து குவைத்தின் அரசு தொலைக்காட்சியில் “நமது ஷேக் நவாப் அல் அகமது அல் சபா […]
ஹாரி பாட்டர் படங்களில் ஹாக்ரிடாக நடித்த நடிகர் ராபி கோல்ட்ரேன் 72 வயதில் காலமானார் என்று தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.கோல்ட்ரேன் மார்ச் 30, 1950 அன்று இங்கிலாந்தின் ஸ்காட்லாந்தில் பிறந்தார். ராபி கோல்ட்ரேன் மார்ச் 30, 1950 அன்று இங்கிலாந்தின் ஸ்காட்லாந்தில் பிறந்தார். கோல்ட்ரேன், இரண்டு ஜேம்ஸ் பாண்ட் படங்களிலும் “ஹாரி பாட்டரிலும்” நடித்துள்ளார்.இவர் பிரிட்டனின் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். 12 வயதில், க்ளெனால்மண்ட் கல்லூரியில் மேடையில் “ஹென்றி வி” இலிருந்து […]
முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதியில் 2001 மற்றும் 2006 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இருமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கோவை தங்கம். கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் த.மா.க விலிருந்து விலகி 2021 இல் திமுகவில் இணைந்தார். 73 வயதான கோவை தங்கம் கடந்த சில […]
இந்திய நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா 58 வயதில் காலமானார். நடிகர் மற்றும் அரசியல்வாதி ராஜு ஸ்ரீவஸ்தவா “தி கிரேட் இந்தியன் லாஃப்ட்டர் சேலஞ்ச்-சாம்பியன்ஸ்” நிகழ்ச்சியின் மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியில் “நகைச்சுவை மன்னன்” என்ற பட்டத்தை வென்றவர். சமீபத்தில் ராஜு ஸ்ரீவஸ்தவா ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவமனையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். ராஜு ஸ்ரீவஸ்தவா 41 நாள் தீவிர சிகிச்சை […]
பாலிவுட் நடிகர் ரன்வீர் ஷோரேயின் தந்தையும் திரைப்பட தயாரிப்பாளருமான கிரிஷன் தேவ் ஷோரே தனது 92வது வயதில் வெள்ளிக்கிழமை இரவு காலமானார். ரன்வீர் தனது தந்தையின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார், மேலும் அவரது தந்தை “உத்வேகம் மற்றும் பாதுகாப்பின் மிகப்பெரிய ஆதாரம்” என்று கூறியுள்ளார். கேடி ஷோரே 1980கள் மற்றும் 1990களில் கேடிஎஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பல படங்களை வெளியிட்டுள்ளார். View this post on Instagram A post shared […]
பீகாரைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., மகேந்திர பிரசாத் டெல்லியில் உடல்நலக்குறைவால் காலமானார். பீகார் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை எம்பி மகேந்திர பிரசாத் (81 வயது) நீண்ட நாள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். எம்பி மகேந்திர பிரசாத் 1985 முதல் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தவர். முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர் அதன் பிறகு ஜனதா தளத்தில் இணைந்தார். பின்னர், லலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்திலிருந்து […]
இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் இன்று காலமானார். மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் தனது 80 வது வயதில் இன்று காலமானார்.அவர் திங்கள்கிழமை மதியம் மங்களூரு யெனெபோயா மருத்துவமனையில் காலமானார். ஜூலை மாதம் மூளையில் இருந்து இரத்தக் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்த முன்னாள் அமைச்சர் பெர்னாண்டஸ், தனது வீட்டில் யோகா பயிற்சி செய்யும் போது தலையில் காயம் ஏற்பட்டு மங்களூரில் உள்ள […]
டென்னிஸ் ‘ஹால் ஆஃப் ஃபேமர்’ ஷெர்லி ஃப்ரை இர்வின் வயது மூப்பு காரணமாக காலமானார். அமெரிக்காவின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையான ஷெர்லி ஃப்ரை இர்வின் வயது மூப்பு காரணமாக கடந்த ஜூலை 13 ஆம் தேதியன்று காலமானார்.அவருக்கு வயது 94 ஆகும்.அவரது மரணம் செவ்வாயன்று சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. 1941 ஆம் ஆண்டு,ஷெர்லி ஃப்ரை தனது 14 வயதில், யு.எஸ். தேசிய சாம்பியன்ஷிப்பில் தொடர்ச்சியாக 16 போட்டிகளில் முதல் இடத்தைப் […]
காங்கிரஸ் எம்.பி ராஜீவ் சாதவ் இன்று தனியார் மருத்துவமனையில் காலமானார். காங்கிரஸ் எம்.பி ராஜீவ் சாதவ் சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் ராஜீவ் சத்தா கடந்த சில நாட்களாக புனேவில் உள்ள ஜஹாங்கிர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், அவரது உடல்நிலை மோசமாக நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாஜக ஊடகபிரிவு செயலாளர் ராஜன் நாகர்கோவிலில் மாரடைப்பால் உயிரிழந்தார். பாஜக ஊடகபிரிவு செயலாளர் ராஜனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது வழியிலேயே ராஜன் உயிரிழந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எம்ஏ அய்யலுசாமி இன்று காலமானார். இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யலுசாமி( வயது 92) தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். 1996 முதல் 2001 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.இந்திய கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யலுசாமி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், வாலிபர் சங்கத்தைக் கட்டமைத்த கே.சி.கருணாகரன் நேற்று நள்ளிரவு காலமானார். கே.சி.கருணாகரன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். மறைவு குறித்து அவர் இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் மாநிலக்குழு உறுப்பினருமான கேசிகே என்று அழைக்கப்படும் கே.சி.கருணாகரன் ( 74) உடல்நலக் குறைவால் அக்.,9 நள்ளிரவு […]
லக்னோவில் நேற்று பாஜக எம்.எல்.ஏ தியோரியா சதர் தொகுதியைச் சேர்ந்த ஜன்மேஜாய் சிங் மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 75. இவருக்கு உடல்நிலை குறைவு காரணமாக லக்னோவில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். லக்னோ சட்டமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள எம்.எல்.ஏ ஜன்மேஜாய் சிங் தியோரியாவிலிருந்து வந்திருந்தார். 4 மாதங்களுக்கு முன்பு மறைந்த எம்.எல்.ஏ ஜன்மேஜயா சிங்குக்கு கூட மாரடைப்பு ஏற்பட்டது என்பது தெரியவந்தது. இவர்களுக்கு மூன்று […]
பிரபல கிளாசிக்கல் பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் அமெரிக்காவின் நியூஜெர்சியில் காலமானார். இவரது மரணத்திற்கு காரணம் இன்னும தெரியவில்லை. இவரது மரண செய்தியை இவரது மகள் துர்கா ஜஸ்ராஜ் தெரிவித்தார். பண்டிட் ஜஸ்ராஜிக்கு 90 வயது. அவர் ஜனவரி 28, 1930 இல் பிறந்தார். இந்தியாவின் பிரபல கிளாசிக்கல் பாடகர்களில் ஒருவர் ஜஸ்ராஜ். அவரது தந்தை பண்டிட் மோதிராம் இறந்தபோது ஜஸ்ராஜுக்கு நான்கு வயது, அவர் மூத்த சகோதரர் பண்டிட் மணிராமின் ஆதரவின் கீழ் வளர்க்கப்பட்டார். இசையில் ஜஸ்ராஜ் […]
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் இன்று காலை காலமானார். சென்னை மேற்கு மாவட்ட திமுகச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை கொடுத்து வந்தனர்.சமீபத்தில், அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. பின்னர், அவரது உடல் நல்ல முன்னேற்றத்தில் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து, இரண்டு நாள்களுக்கு […]
குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார். வேலூர் குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏக்கள் தேர்வானார். கடந்த இரண்டு நாட்களில் இரண்டு திமுக எம்எல்ஏக்கள் உயிரிழப்பு. இவர் சில மாதங்களுக்கு முன்பாக இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் உடல்நலக்குறைவால் இருந்து வந்த காத்தவராயன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இந்நிலையில் […]
2009ம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் மூலம் அறிமுகமான கோபாலகிருஷ்ணன் உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். 2009ம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் மூலம் அறிமுகமான கோபாலகிருஷ்ணன் சசிக்குமாருக்கு மாமன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். அரசு வேலைக் கிடைத்தால் தான் தனது பெண்ணை திருமணம் செய்து தருவேன் என்று பிடிவாதமாக இருக்கும் அவரது கதாப்பாத்திரம் பேசும்படியாக இருந்தது. அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த கோபாலகிருஷ்ணன் சமீபத்தில் […]