சந்திரயான்-1 மிஷன் இயக்குநர் ஸ்ரீனிவாஸ் ஹெக்டே காலமானார்.!
பெங்களூரு : சந்திரயான்-1 இயக்குநராக பணியாற்றிய முன்னாள் இந்திய விஞ்ஞானி ஸ்ரீனிவாஸ் ஹெக்டே (71) பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுநீரக செயலிழப்பு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
யார் இந்த ஸ்ரீநிவாஸ் ஹெக்டே
நிலவின் ரகசியங்களை ஆராய்வதற்காக இந்தியாவின் ISRO சார்பில், முதன்முதலாக சந்திரயான்-1 திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கான பணிகள், 22 அக்டோபர் 2008 முதல் 28 ஆகஸ்ட் 2009 வரை நடந்த நிலையில், அதன் திட்ட இயக்குநராக ஸ்ரீநிவாஸ் ஹெக்டே இருந்துள்ளார்.
1978 2014 வரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (ISRO) பணிபுரிந்த ஸ்ரீநிவாஸ், UR ராவ் செயற்கைக்கோள் மையத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். ஆயிரக்கணக்கான விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளிலும் பங்கேற்றுள்ளார்.