கேரள விமான விபத்து தொடர்பாக டிஜிசிஏ, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், ஏஏஐ அதிகாரிகள் டெல்லியில் இன்று கூட்டம் நடத்த உள்ளனர். கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக சிவில் விமான இயக்குநரகம், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் விமான ஊடுருவல் சேவை உறுப்பினர்கள் இன்று டெல்லியில் அலோசனை மேற்கொள்ள உள்ளனர். இந்த கூட்டம் ராஜீவ் காந்தி பவனில் நடைபெற உள்ளது. இதற்கிடையில், அனைத்து பயணிகளுக்கும் உதவிகளை வழங்குவதற்காக […]
கொரோனா வைரஸ் காரணமாக விமான போக்குவரத்து விமான போக்குவரத்து தடைபட்டுள்ளது . இதனால், வெளிநாடுகளில் உள்ள ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகிறார்கள்.இதனால், மத்திய அரசு “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். இந்நிலையில், துபாயில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.தற்போது, கேரளாவில் கனமழை பெய்து வருவதால் விமானத்தை தரை இறக்க […]
துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுபாதையில் நிற்காமல் சறுக்கி கொண்டு சென்று விபத்துக்குள்ளானது.இதில் பலியானோர் எண்ணிக்கை தற்பொழுது 16 ஆக அதிகரித்துள்ளது .தேசிய மீட்டப்புப்படை வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .