கேரள விமான விபத்து: விமான போக்குவரத்து அமைச்சகம் டெல்லியில் ஆலோசனை.!

Default Image

கேரள விமான விபத்து தொடர்பாக டிஜிசிஏ, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், ஏஏஐ அதிகாரிகள் டெல்லியில் இன்று கூட்டம் நடத்த உள்ளனர்.

கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக சிவில் விமான இயக்குநரகம், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் விமான ஊடுருவல் சேவை உறுப்பினர்கள் இன்று டெல்லியில் அலோசனை மேற்கொள்ள உள்ளனர். இந்த கூட்டம் ராஜீவ் காந்தி பவனில் நடைபெற உள்ளது.

இதற்கிடையில், அனைத்து பயணிகளுக்கும் உதவிகளை வழங்குவதற்காக டெல்லியில் இருந்து இரண்டு சிறப்பு நிவாரண விமானங்களும் மும்பையில் இருந்து ஒரு விமானமும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளான சம்பவத்தின் குடும்ப உறுப்பினர்களும் இன்று கோழிக்கோடு சென்றடைந்தனர்.

கேரளாவில் கனமழை பெய்து வருகிற நிலையில், நேற்று துபாயில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானம் எதிர்பாரத விதமாக விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் காயமடைந்தவர்கள் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்