கோழிக்கோடு விமான விபத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் – மு.க.ஸ்டாலின் ட்வீட்
கொரோனா வைரஸ் காரணமாக விமான போக்குவரத்து விமான போக்குவரத்து தடைபட்டுள்ளது . இதனால், வெளிநாடுகளில் உள்ள ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகிறார்கள்.இதனால், மத்திய அரசு “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்படுகிறார்கள்.
இந்நிலையில், துபாயில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.தற்போது, கேரளாவில் கனமழை பெய்து வருவதால் விமானத்தை தரை இறக்க விமானி முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஓடுபாதையில் விமானம் சறுக்கிக்கொண்டு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை தாண்டி 35 அடி பள்ளத்தில் விழுந்தது.
இந்த கோர விபத்தில் 2 விமானிகள் ஒரு குழந்தை உட்பட 17 பேர் உயிழந்துள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடனும், 15 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து ட்வீட் செய்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வந்தநிலையில் கோழிக்கோடு விமான விபத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டும் என பதிவிட்டுள்ளார் .
Shocked to hear about the Air India plane crash in Calicut that was bringing home Indians who were stranded abroad due to #COVID19.
I offer my sincere condolences to the families of those who lost their lives in this tragedy and hope for a speedy recovery for the injured.
— M.K.Stalin (@mkstalin) August 8, 2020