பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்!?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும், அவர்கள் ஆப்கானிஸ்தானில் கொலையாளி ஒருவரிடம் உதவி கோரியுள்ளதாகவும் பயங்கரவாத தடுப்பு துறையின் கைபர் பக்துன்க்வா பிரிவை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாதுகாப்புக்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, பாகிஸ்தானில் பொருளாதார … Read more

#Shocking:பெட்ரோல் விலை ரூ.30 அதிகரிப்பு;அரசு திடீர் அறிவிப்பு- ஒரு லிட்டர் இவ்வளவா?..!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில்,பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  அறிவிப்பு விடுத்தார். இதனையடுத்து,தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள சாமானியர்களுக்கு தற்போது பெரிய  அடியாக பெட்ரோல் விலை ரூ.30 உயர்த்தப்பட்டுள்ளது.பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.இந்த உயர்வுக்குப் … Read more

இனிமேல் நான் மிகவும் ஆபத்தானவனாக தான் இருப்பேன் – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அதிரடி..!

நான் அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருந்தபோது நான் ஆபத்தானவனாக இல்லை, ஆனால் இப்போது நான் மிகவும் ஆபத்தானவனாக இருப்பேன் என்று இம்ரான் கான் பேச்சு.  பாகிஸ்தான் பிரதமர்  பதவியில் இருந்து விலகிய பின் இம்ரான் முதல்முறையாக பெஷாவரில் புதன்கிழமை நடைபெற்ற பேரணியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நான் நீதித்துறையிடம் கேட்கிறேன், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் முன்பாக நள்ளிரவில் நீதிமன்றம் திறக்கப்பட்டது ஏன்?  45 ஆண்டுகளாக இந்த தேசம் என்னை அறிந்திருக்கிறது. … Read more

பாக்.புதிய பிரதமராக பதவியேற்ற ஷபாஸ் ஷெரீப் -வாழ்த்திய பிரதமர் மோடி!

பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றுக் கொண்டார். பாகிஸ்தானின் கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு அந்நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான்கான்தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் நமிபிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இதனைத் தொடர்ந்து,நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரதமர் பதவியை இம்ரான் கான்இழந்ததை தொடர்ந்து,புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டார்.பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் தேர்தலை இம்ரான்கான் கட்சியினர் அனைவரும் புறக்கணித்ததால் நவாஸ் ஷெரீப்பின் சகோதரரான ஷபாஸ் ஷெரீப் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில்,பாகிஸ்தானின் 23-வது பிரதமராக … Read more

#BREAKING: பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் தேர்வு!

பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு. பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி இழந்ததை தொடர்ந்து, புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் தேர்தலை இம்ரான்கான் கட்சியினர் அனைவரும் புறக்கணித்ததால் ஷாபாஸ் ஷெரீப் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நள்ளிரவில் வாக்கெடுப்பு;கவிழ்ந்த இம்ரான் கான் அரசு -பாக்.புதிய பிரதமர் இவரா?..!

பாகிஸ்தான்:எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசே காரணம் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதன் காரணமாக எதிர்கட்சிகள், பிரதமர் இம்ரான்கான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. பிரதமர் வரவில்லை: இதனையடுத்து,இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த நேற்று நாடாளுமன்றம் கூடியது. ஆனால்,இம்ரான் … Read more

இந்தியாவை பிடித்திருந்தால் அங்கேயே சென்று விடுங்கள் – இம்ரான்கானுக்கு எதிர்க்கட்சி தலைவர் அறிவுரை..!

உங்களுக்கு இந்தியாவை அவ்வளவு பிடித்திருக்கிறது என்றால், அங்கேயே நீங்களும் சென்றுவிடுங்கள் என இம்ரான்கானுக்கு மரியம் நவாஸ் அறிவுரை. நாட்டு மக்களிடையே நேற்று உரையாடிய பாக்.பிரதமர் இம்ரான்கான்,தான் நீதித்துறையை மதிப்பதாகவும், ஆனால்,உச்சநீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும்,குதிரை பேரத்தில் ஈடுப்பட்டுள்ளன எதிர்கட்சிகளின் செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் இம்ரான் கான் கூறினார். அதே சமயம், ஆட்சிக்கட்டிலிலிருந்து தன்னை இறக்க அமெரிக்கா துடிப்பதாகவும், சர்வதேச சாதிகளால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இம்ரான் கான் குற்றம் சாட்டினார். அமெரிக்காவால் … Read more

#BREAKING : நம்பிக்கை இல்லா தீர்மானம் – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பாக். அரசு மேல்முறையீடு…!

பாநாயகரின் நடவடிக்கை செல்லாது என்றும் உத்தரவிட்ட  பாக்.உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு மேல்முறையீடு செய்துள்ளது.  பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசே காரணம் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதன் காரணமாக எதிர்கட்சிகள், பிரதமர் இம்ரான்கான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முனைப்பு காட்டி வந்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம்  இந்த நிலையில், கடந்த 3-ஆம் தேதி பிரதமர் இம்ரான் கான் அரசின் … Read more

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இரவு 8 மணிக்கு மேல் வாக்கெடுப்பு!

நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 8 மணிக்கு மேல் நடைபெறும் என தகவல். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இரவு 8 மணிக்கு மேல் நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்புக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று கூடியது.  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வந்த நிலையில், பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது ஆதரவு எம்பிக்கள் வரவில்லை என … Read more

நம்பிக்கையில்லா தீர்மானம் – பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது!

இம்ரான்கானுக்கு எதிரான அவரது கட்சி எம்பிக்கள் 30 பேரும் நாடாளுமன்றத்துக்கு வந்திருப்பதாக தகவல். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்புக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் கூடியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வந்த நிலையில், பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது ஆதரவு எம்பிக்கள் வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இம்ரான்கானுக்கு எதிரான அவரது கட்சி எம்பிக்கள் 30 பேரும் அவைக்கு வந்திருப்பதாக தகவல் கூறப்படுகிறது. இதனிடையே, பாக். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு அடுத்த வாரத்திற்கு தள்ளி … Read more