இந்தியாவை பிடித்திருந்தால் அங்கேயே சென்று விடுங்கள் – இம்ரான்கானுக்கு எதிர்க்கட்சி தலைவர் அறிவுரை..!
உங்களுக்கு இந்தியாவை அவ்வளவு பிடித்திருக்கிறது என்றால், அங்கேயே நீங்களும் சென்றுவிடுங்கள் என இம்ரான்கானுக்கு மரியம் நவாஸ் அறிவுரை.
நாட்டு மக்களிடையே நேற்று உரையாடிய பாக்.பிரதமர் இம்ரான்கான்,தான் நீதித்துறையை மதிப்பதாகவும், ஆனால்,உச்சநீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும்,குதிரை பேரத்தில் ஈடுப்பட்டுள்ளன எதிர்கட்சிகளின் செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் இம்ரான் கான் கூறினார்.
அதே சமயம், ஆட்சிக்கட்டிலிலிருந்து தன்னை இறக்க அமெரிக்கா துடிப்பதாகவும், சர்வதேச சாதிகளால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இம்ரான் கான் குற்றம் சாட்டினார். அமெரிக்காவால் இறக்குமதி செய்யப்பட்ட அரசை ஒருபோதும் தான் ஏற்றுக்கொள்ளப்ப்போவதில்லை என்றும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கி அமைதியான போராட்டங்களை நடத்துமாறும் வலியுறுத்தினார்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் எந்த நாடும் கட்டளையிடுவதில்லை. ஏனெனில், இந்தியர்கள் சுயமரியாதை கொண்டவர்கள். மேலும், எந்த வல்லரசு நாடுகளும் இந்தியாவுக்கு ஆணையிட முடியாது என தெரிவித்திருந்தார்.
இந்தியா குறித்து இம்ரான்கான் புகழ்ந்து பேசியதற்கு, பிரதான எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் துணைத் தலைவர் மரியம் நவாஸ், உங்களுக்கு இந்தியாவை அவ்வளவு பிடித்திருக்கிறது என்றால், அங்கேயே நீங்களும் சென்றுவிடுங்கள். பாகிஸ்தான் வாழ்க்கையை விட்டுவிடுங்கள் என தெரிவித்துள்ளார்.