Tag: hydrocarbon

#JustNow: ஈபிஎஸ்-யுடன் பி.ஆர்.பாண்டியன் சந்திப்பு!

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் சந்திப்பு. சென்னையில் எடப்பாடி பழனிசாமியுடன் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் சந்தித்து பேசி வருகிறார். ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறு அமைக்கும் ஓஎன்ஜிசி நடவடிக்கைக்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி என்று கூறப்படுகிறது.

#AIADMK 1 Min Read
Default Image

ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி தரப்படாது – அமைச்சர் மெய்யநாதன்

ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி வழங்கப்படாது என்பது உறுதி என்று அமைச்சர் தகவல். கடந்த 2013-ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் பெரியகுடியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக கிணறு தோண்டிய போது பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்திற்கு பிறகு விவசாயிகளின் போராட்டம் காரணமாக கிணறு முற்றிலுமாக மூடப்பட்டது. 2021-ஆம் ஆண்டு மீண்டும் கிணறை செயல்படுத்த ஓஎன்ஜிசி நிறுவனம் முனைப்பு காட்டியபோது தமிழக அரசு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தது. பெருங்குடியில் ஓஎன்ஜிசி […]

#Thiruvarur 4 Min Read
Default Image

ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணி நடைபெறவில்லை – மத்திய அரசு

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் பிரித்து எடுக்கும் பணி நடைபெறவில்லை என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நாகப்பட்டினம் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி தாலுகாவையும் இணைத்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக வரையறுத்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இப்பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முன்னதாக மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில்,தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் பிரித்தெடுக்கும் பணி நடைபெறவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மக்களவையில் இன்று திமுக எம்பி […]

DMK MP Kanimozhi 2 Min Read
Default Image

ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது- முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  இன்று தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்றது.இதில் சுற்றுச்சூழல் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.அப்பொழுது தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பரசன்    ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பேசினார்.இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.   அப்பொழுது அவர் பேசுகையில் ,தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது.காவிரி டெல்டா பகுதி முழுமையாக பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அச்சப்பட வேண்டியதில்லை  என்று பதில் அளித்தார். 

#ADMK 2 Min Read
Default Image

என்பிஆர்-க்கு எதிராக மக்களைத் திரட்டி ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும்-திமுக கூட்டத்தில் தீர்மானம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.  திமுக  15-வது  உட்கட்சி பொதுத்தேர்தல் பிப்ரவரி 21-ம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் இன்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதாவது,என்பிஆர்-க்கு (தேசிய மக்கள் தொகை பதிவேடு) எதிராக மக்களைத் திரட்டி காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் அதிமுக ஆட்சியில் ஒட்டுமொத்த பணி நியமனங்கள் […]

#DMK 3 Min Read
Default Image

#BREAKING : ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் வழக்கு

ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறு அமைப்பதற்க்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனம் பெற வேண்டியது  கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவின் எண்ணை வளங்களை கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக  ஹைட்ரோகார்பன் உற்பத்தி செய்தல் மற்றும் வளங்களை கண்டறிதல் என்ற கொள்கையை மத்திய அரசு கடந்த 2017 ம் ஆண்டு அறிமுகம் செய்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள  டெல்டா மாவட்டங்களில் எடுக்க திட்டமிடப்பட்டது […]

#SupremeCourt 4 Min Read
Default Image

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம்… அறிவித்தார் அக்கட்சி தலைவர்..

திமுக சார்பில் தமிழகத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக எதிர்கட்சி தலைவர் எடுக்கும் புதிய அஸ்த்திரம்.  ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் இதுகுறித்த மத்திய அரசின் அறிவிப்பையும் திரும்ப பெற வேண்டும் என்றும் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் மத்திய அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 341க்கும் மேற்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான ஆய்வு கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் […]

#DMK 3 Min Read
Default Image

ஹைட்ரோகார்பன் திட்டம் -பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்.!

ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறு அமைப்பதற்க்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனம் பெற வேண்டியது  கட்டாயம் இல்லை என  மத்திய அரசு கூறியது. இதை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறு அமைப்பதற்க்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனம் பெற வேண்டியது  கட்டாயம் இல்லை எனவும் , மேலும் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் […]

Chief Minister Palanisamy 3 Min Read
Default Image

மீத்தேன் , ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது-அமைச்சர் ஜெயக்குமார்.!

ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறு அமைப்பதற்க்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனம் பெற வேண்டியது  கட்டாயம் இல்லை என மத்திய அரசு கூறியது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது எனவும் ,மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் அதிமுக அரசு ஆதரிக்காது என ஜெயக்குமார் கூறினார். தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகவும் , ஒ.என்.ஜி.சி நிறுவனம் விளை நிலங்களில் குழாய் பதிக்கக்கூடாது எனவும் அப்படி குழாய் பதிப்பதனால் விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படும் […]

hydrocarbon 4 Min Read
Default Image

ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி.!

2017-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. நெடுவாசல் மற்றும் வடகாடு பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் வடகாடு பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இது தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்கள் மீது இன்று விசாரணை […]

Case dismissed 3 Min Read
Default Image

எச்சரிக்கை எல்லாம் வேண்டாம் !சொல்ல வேண்டிய கருத்தை மட்டும் சொல்லுங்கள் வைகோ -வெங்கய்யா நாயுடு

மாநிலங்களவையில் மதிமுக எம்.பி.வைகோ பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதித்தால் தமிழகம் எத்தியோப்பியாவாக மாறிவிடும். ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் வாழ்வாதாரத்தை பாதிக்கும் .மாணவர்கள், விவசாயிகள் கடுமையாக இந்த திட்டத்தை எதிர்த்து போராடி வருகின்றனர்.ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என நான் எச்சரிக்கிறேன் என்று பேசினார். இதற்கு  மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, எச்சரிக்கை எல்லாம் கொடுக்க கூடாது, சொல்ல வேண்டிய கருத்தை மட்டும் சொல்லுங்கள் என்று […]

#Politics 2 Min Read
Default Image

புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை முழுமையாக எதிர்ப்போம்-புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை முழுமையாக எதிர்ப்போம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.இந்த ஆலோசனைக்கு பின்னர் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக ஜூன் 12ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடைபெறும். புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை முழுமையாக எதிர்ப்போம். புதுச்சேரியில் 116 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க உள்ளதாக கடிதம் வந்துள்ளது. ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு புதுச்சேரி ஒத்துழைப்பு வழங்காது என பிரதமருக்கு கடிதம் எழுத […]

#Congress 2 Min Read
Default Image

முதல்வர் பதவியை தூக்கியெறிந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட தயார்-புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

தமிழகம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஆய்வு நடத்த வேதாந்தா நிறுவனத்திற்க்கு  மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.இதில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசினார்.அப்போது அவர் கூறுகையில், ஆட்சியை மத்திய அரசு கலைத்தாலும், மக்கள் நலனுக்காக முதல்வர் பதவியை தூக்கியெறிந்து மதச்சார்பற்ற அணியோடு இணைந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக […]

#Congress 2 Min Read
Default Image

ஹைட்ரோ கார்பன் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த – முத்தரசன்

ஹைட்ரோ கார்பன் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார் தமிழகத்தில் விளைநிலங்களில்  ஹைட்ரோ கார்பன் எடுக்க ஆய்வு நடத்த வேதாந்தா நிறுவனத்திற்க்கு  மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்தநிலையில் இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,திட்டத்திற்கு அனுமதி வழங்கியதை கண்டித்து, ஜூன் மாதத்தில் விழுப்புரம் முதல் திருவாரூர் வரை […]

#Politics 2 Min Read
Default Image

“ஹைட்ரோ கார்பன்” தமிழகத்தில் எடுக்க ‘ஒஎன்ஜிசி-வேதாந்தா’வுடன் அவசரமாக கையெழுத்து வெளியானது தகவல்…!!

ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒஎன்ஜிசி மற்றும் வேதாந்தா ஆகிய 2 நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் மத்திய அரசு  கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒஎன்ஜிசி மற்றும் வேதாந்தா ஆகிய 2 நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் மத்திய அரசு வரும் திங்கட்கிழமை கையெழுத்திட உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் அதற்கான நிறுவனங்களையும் தேர்வு செய்துள்ளாத தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் […]

#ONGC 3 Min Read
Default Image

மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் புதிய திட்டத்தை ட்விட்டரில் விமர்சித்த திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின்…!!

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை காலந்தாழ்த்தி தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு,தற்போது புதிதாக ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு காவிரிப்படுகை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் அனுமதியளிக்க முன்வந்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டையும், தமிழக  விவசாயிகளையும் வாட்டி வதைக்கும் இந்த எதிர்மறைப் போக்கை மத்திய அரசு உடனே கைவிட வேண்டுமென்றும், இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டைப் பாலைவனமாக்க முயற்சித்தால் மீண்டும் ஒரு போராட்டக் களத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன் என அவர் […]

#DMK 2 Min Read
Default Image