“ஹைட்ரோ கார்பன்” தமிழகத்தில் எடுக்க ‘ஒஎன்ஜிசி-வேதாந்தா’வுடன் அவசரமாக கையெழுத்து வெளியானது தகவல்…!!
ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒஎன்ஜிசி மற்றும் வேதாந்தா ஆகிய 2 நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒஎன்ஜிசி மற்றும் வேதாந்தா ஆகிய 2 நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் மத்திய அரசு வரும் திங்கட்கிழமை கையெழுத்திட உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் அதற்கான நிறுவனங்களையும் தேர்வு செய்துள்ளாத தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன் அடிப்படையில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு சிதம்பரமும், வேதாந்தா நிறுவனத்துக்கு வேறு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், டெல்லியில் வரும் திங்கட்கிழமை கையெழுத்தாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்க்து.
இந்நிலையில் இந்த் திட்டத்திற்கு மக்களிடையே கடும் எதிப்பு கிளப்பியது.மேலும் போரட்டமாக வெடித்தது.இந்த திட்டம் மக்கள் விரோத திட்டம் என்று மக்கள் எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU