விருதுநகர்:பண மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இருவேறு வழக்குகளில் 5 பிரிவுகளின்கீழ் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து,முன்ஜாமீன் கோரிய ராஜேந்திர பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதனால்,அவரை […]
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக ரூ.7 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக மதுரையை சார்ந்த மகேந்திரன் என்பவர் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து,முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.அதில்,தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை,சென்னை உயர்நீதிமன்றம் விதிமுறைகளை […]
சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ராஜேந்திர பாலாஜி அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். இவர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது என் வீட்டில் மருத்துவர்களின் அறிவுரையின்படி தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறேன். இன்னும் 15 நாட்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால் என்னை நேரில் சந்திக்க யாரும் வர வேண்டாம். […]