சமூக வலைத்தளங்களில் என்னைப்பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்-முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

Default Image

சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

ராஜேந்திர பாலாஜி அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். இவர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது என் வீட்டில் மருத்துவர்களின் அறிவுரையின்படி தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறேன். இன்னும் 15 நாட்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால் என்னை நேரில் சந்திக்க யாரும் வர வேண்டாம். மேலும் என்னுடன் கடந்த 10 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி வரும் பொய் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். ஏழை குடும்பத்தில் பிறந்து லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்டு அமைச்சர் பதவியிலும், அரசியல் பொது வாழ்க்கையிலும் செயல்பட்டு உள்ளேன், செயல்பட்டும் வருகிறேன். சில நேரங்களில் அரசியல் உணர்ச்சி மிகுந்து சில தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளேன். அதற்காக வருத்தம் அடைந்து அரசியலில் பக்குவமாக தற்போது செயல்பட்டு வருகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்