மத்திய அரசு கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறுவது, பயணிகள் பீதி அடைய வேண்டாம் என டைட்டானிக் கேப்டன் பயணிகளுக்குச் சொல்வது போன்று உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. The Health Minister saying that the Indian Govt has the #coronavirus crisis under control, is like the Capt of the Titanic […]
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி கட்சியினர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கேட்பதாகவும், இதுகுறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும் என்றும் தெரிவித்தார். கூட்டணிக் கட்சியினர் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்பது என்பது அவரவர் உரிமை எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், துறைவாரியாக மத்திய அரசின் விருதுகளை பெறும் அளவு தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறும் சூழலில், தமிழக அரசை விமர்சிக்க வேண்டிய அவசியம், நடிகர் கமலுக்கு தேவையில்லை என கூறியுள்ளார்.
தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என திமுக கோரிக்கை வைத்துள்ளது. இந்தக் கோரிக்கையைச் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன்பாக திமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசிய அவர், தரங்கெட்ட ஆட்சி நடைபெறுவதற்கு எடுத்துக்காட்டு டி.என்.பி.எஸ்.சி முறைகேடு என கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்ததாக தேர்வர்கள் கொடுத்த புகாரின் பேரில் டி.என்.பி.எஸ்.சி. விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் […]
தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்று அளித்தார். அதில் தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்து பேசியதாக செய்தி வெளியானது. சீமான் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிபதி வழக்கை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்று அளித்தார். அதில் தமிழக அரசையும், முதல்வரையும் கடுமையாக விமர்சித்து பேசியதாக செய்தி வெளியானது. சீமானின் இந்த கருத்தும், செய்தியும் தமிழக […]
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் விரேந்திர ஷேவாக், சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ரிஷப் பண்ட் இந்திய அணியில் இருந்து தற்போது தவிர்த்து வருவதை விமர்சித்துள்ளார். அத்துடன், சச்சின், காம்பீர் மற்றும் தன்னை தோனி எப்படி நடத்தினாரோ அதேபோல் நடத்தக் கூடாது என்றும் சேவாக் வெளிப்படையாக பேசியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் விரேந்திர ஷேவாக், சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ரிஷப் பண்ட் இந்திய […]
2020-ம் ஆண்டிற்கான சட்டசபை கூட்டத்தொடரில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் எதிர்கட்சி வெற்றிபெற்று பாஸ் ஆகியுள்ளது என்று, முதலமைச்சர் தெரிவித்தார். நகராட்சி, மாநகராட்சிக்கு தேர்தல் நடந்தால் திமுக Distinction-ல் தேர்வு பெறும் என்று, மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக 2020-ம் ஆண்டிற்கான சட்டசபை கூட்டத்தொடர் வரும் 9-ம் தேதி வரை நடத்த முடிவு எடுக்கப்பட்டு, இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் எட்டப்படி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட சட்டசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். […]
சென்னை தியாகராய நகரில் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர் பேசுகையில், வினியோகஸ்தர் தேர்தலில் வெற்றி பெற வாக்களித்த அனைவருக்கும் நன்றி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஆளும் கட்சிக்கு இந்த தேர்தல் முடிவு என்பது அபாய மணி, அபாய சங்கு என்றும், அரசியலிலுக்கு அதிஷ்டம் வேண்டும் என தெரிவித்தார். சென்னை தியாகராய நகரில் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர் பேசுகையில், நேற்றைய தினம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் மாவட்டத்திற்கான திரைப்பட வினியோகஸ்தர் தேர்தலில் வெற்றி […]
இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, தோனி கேப்டனாக இருந்த காலத்தில் தங்களுக்கு போதுமான விளையாட்டு அனுபவம் கிடைக்கவில்லை. அதிக பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியதால் போதுமான புரிதலும், ஒருங்கிணைப்பும் இல்லை என குற்றம்சாட்டினார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தோனி கேப்டனாக இருந்த காலத்தில் தங்களுக்கு போதுமான விளையாட்டு அனுபவம் கிடைக்கவில்லை என்றும், அப்போது அணியில் 6 முதல் 7 வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததால், அவர்களை சுழற்சி முறையில் தோனி […]