சீமான் மீது குற்றச்சாட்டு பதிவு.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
- தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்று அளித்தார். அதில் தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்து பேசியதாக செய்தி வெளியானது.
- சீமான் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிபதி வழக்கை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்று அளித்தார். அதில் தமிழக அரசையும், முதல்வரையும் கடுமையாக விமர்சித்து பேசியதாக செய்தி வெளியானது. சீமானின் இந்த கருத்தும், செய்தியும் தமிழக அரசுக்கும், முதல்வரின் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக சீமான் மீதும், தனியார் தொலைக்காட்சி (சத்தியம்) மீதும், அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மற்றும் தண்டிக்க வேண்டும் என தமிழக முதல்வர் சார்பாக சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு சீமான் இன்று நேரில் ஆஜரானார். அப்போது அவரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் வழங்கபட்டது. இதனையடுத்து, சீமான் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிபதி வழக்கை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.