உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சிக்கு அபாய சங்கு ஒலித்த திமுக.! டி.ராஜேந்திரன் பளிச் பேட்டி.!

Default Image
  • சென்னை தியாகராய நகரில் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர் பேசுகையில், வினியோகஸ்தர் தேர்தலில் வெற்றி பெற வாக்களித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
  • தொடர்ந்து பேசிய அவர், ஆளும் கட்சிக்கு இந்த தேர்தல் முடிவு என்பது அபாய மணி, அபாய சங்கு என்றும், அரசியலிலுக்கு அதிஷ்டம் வேண்டும் என தெரிவித்தார்.

சென்னை தியாகராய நகரில் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர் பேசுகையில், நேற்றைய தினம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் மாவட்டத்திற்கான திரைப்பட வினியோகஸ்தர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பதவி ஏற்றதாக தெரிவித்தார். பின்னர் தேர்தலில் வெற்றி பெற வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

இந்நிலையில், திரையுலக வாழ்க்கையில் 40-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக எந்த திரைப்படம் வந்தாலும் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் அன்று வர்தகசபை வாசலில் நின்று ஜி.எஸ்.டி வரி எதிர்த்து போராடினேன். மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி விதித்த பிறகு மாநில அரசு கேளிக்கை வரியை எதற்காக விதிக்கிறது என்று கேள்வி எழும்பினேன். இந்திய அளவில் இல்லாதவாறு 8% சதவீதம் கேளிக்கை வரி மக்களை வாட்டி வதக்கிறது என்றும் டி.ராஜேந்தர் தெரிவித்தார். மேலும் தமிழக அரசு மற்றும் திரைப்படத் துறையில் இருப்பவர்களை எங்களை எதிராகவும், உதிரியாகவும் எண்ணக்கூடாது. திரைப்பட திரையரங்குகள் மூட வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் இல்லை என்றும் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் முடிவுக்களில் ஆளும் கட்சியான அதிமுகவை விட திமுக அதிக இடங்களை வென்று வருகிறது. இப்போது, மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டனர். ஆளும் கட்சிக்கு இந்த தேர்தல் முடிவு என்பது ஒரு எச்சரிக்கை , அபாய சங்கு, அபாய மணி என்றும், பின்னர் என்னால் இது மட்டும் தான் சொல்ல முடியும் என கூறினார். பின்பு ஊதி கொண்டிருக்கிறாய் அபாய சங்கு இந்த தேர்தலில் ஏற்றுக் கொள்ளவில்லை நான் பங்கு என்று சொல்லி  இதை டபுள் மீனிங்ல கூட எடுத்துக்கலாம் என குறிப்பிட்டார். மேலும் அரசியலிலுக்கு அதிஷ்டம் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்