அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். கருவாடு கூட ஒரு நாள் மீனாகும், ஆனால் ஒரு நாள் கூட சசிகலா அதிமுக உறுப்பினராக ஆக முடியாது. அதிமுகவில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகிவந்த நிலையில், சசிகலா அவர்கள், ‘நான் விரைவில் வந்துவிடுவேன். அனைத்தையும் சரி செய்து விடலாம்.’ என தொடர்களிடம் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி […]
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரத்தில் அமைச்சர் வாக்கு சேகரிக்கும்போது ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு தலா ரூ.100 கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மேற்கு காவல்நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்ட 2 […]
மதங்களுக்கு இடையே மோதல் விளைவிக்கும் போக்கை யார் செய்தாலும் கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். கடந்த சில நாள்களுக்கு முன் “கறுப்பர் கூட்டம்” என்ற யூடியூப் சேனலில் கடவுள் முருகன் மற்றும் கந்த சஷ்டி கவசம் பாடல் குறித்தும் இந்துமத தெய்வங்களையும், வழிபாட்டு முறைகளையும், தொடர்ந்து இழிவுபடுத்தியும் வீடியோ வெளிட்டு இருந்தது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வீடியோவை வெளியிட்ட […]
சட்டத்துறை அமைச்சர் சண்முகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டத்துறை அமைச்சராக இருந்து வருபவர் சி.வி.சண்முகம்.இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அனுமதிக்கபட்டுள்ளார். இதயவியல் சிகிச்சை பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் சண்முகத்திற்கு பரிசோதனைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை திடீரென்று மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக மற்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரைக்கு அதிருப்தி தெரிவிக்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பை நீதிபதி தாஹில் ரமானி ராஜினாமா செய்திருந்தார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்கும், அனுப்பி வைத்தார். மேலும் ராஜினாமாநகல உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோஹாய்-க்கும் அனுப்பி வைத்திருந்தார். இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாஹில் ரமானி தலைமையில் […]
தமிழக அரசை குறை சொல்ல எந்த கட்சிக்கும் அருகதை கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், தமிழக அரசை குறை சொல்ல எந்த கட்சிக்கும் அருகதை கிடையாது. 7 பேர் விடுதலையில் முதலில் முயற்சி எடுத்தது ஜெயலலிதா தான். ஆனால் இன்று நீலி கண்ணீர் வடிப்பவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆளுனர் இதுகுறித்து நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன். […]
முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை மிகப்பெரிய கேடி என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ளார்.இந்த நிலையில் சென்னையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சிதம்பரம் இத்தனை ஆண்டு காலமாக யாருக்கு நிதியமைச்சராக இருந்தார்.அவரது குடும்பத்திற்கு தான் நிதியமைச்சராக இருந்துள்ளார்.உலகம் முழுவதும் சொத்து சேர்த்து வைத்திருக்கிற மிகப்பெரிய கேடி சிதம்பரம் என்றும் தெரிவித்துள்ளார்.
100-க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகளை கொண்ட மாவட்டங்களில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், போக்சோ வழக்கில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க கோரிக்கை வந்துள்ளது . பிப்ரவரி 9-ஆம் தேதி கொத்தடிமைகளின் விடுதலை தினமாக அறிவிக்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் […]
சில நாட்களுக்கு முன்னர் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் திமுக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதில் திமுக சார்பில், ‘தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.’ ஆனால் அதிமுக சார்பில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘ நீட் விலக்குக்காக நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்படவில்லை. நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக’ தெரிவித்தார். இந்த விவரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ 2017 பிப்ரவரி மாதம் தமிழக அரசு […]
நீட் விலக்கு மசோதா தொடர்பாக இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில் தமிழக அரசிடம் இருந்து தாக்கல் செய்யப்பட்ட நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நீட் விலக்கு மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இப்படி தவறான தகவலை கூறியதால் அவர் பதவி விலக வேண்டும் என கூறினார். இது குறித்து பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழகம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட நீட் […]
திருடனுக்கு திருடன் ஆதரவு என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்து கடுமையாக தாக்கியுள்ளார். திருடனுக்கு திருடன் ஆதரவு என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணை ஆதரித்து பேசிய டிடிவி தினகரனை ஒருமையில் கடுமையாக அமைச்சர் சி.வி.சண்முகம் வசைப்பாடியுள்ளார்.மேலும் ஐஏஏஸ் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் பனிப்போர் அன்மையில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற விவகாரத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது குற்றம் சாட்டப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் கத்தி, துப்பாக்கி படங்கள் வரிசையில் இது 3 வது படமாக உருவானது சர்கார்.நடிகை கீர்த்தி சுரேஷ் ,இசை புயல் AR ரகுமான் இடையில் சன்பீக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட கூட்டணியில் உருவானது சர்கார். மேலும் விஜய் முருகதாஸ் கூட்டணி ஏற்கெனவே 2 படங்களில் மிகப்பெரிய வசூல் வேட்டையை அடித்தது.அந்த வரிசையில் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல் சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சு, […]