கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி கடந்த 19-ம் தேதி சென்னை வந்தார். நரேந்திர மோடி வருகையையொட்டி சித்ரா நகர்ப் பகுதியிலிருந்து ஆட்களை அழைத்து வருவது தொடர்பாக பாஜகவில் மாவட்ட துணைத் தலைவியாக உள்ள ஆண்டாளுக்கும், அதே கட்சியைச் சேர்ந்த நிவேதாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தைப்பூச திருவிழா.! அறுபடை வீடுகளில் குவிந்து வரும் முருக பக்தர்கள்.! இதற்கிடையில், கடந்த 21-ஆம் தேதி இரவு பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியி […]
பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கொடிக்கம்பம் விவகாரத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பான வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை ஈசிஆர் பனையூரில் உள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு பாஜக கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. இந்த கொடிக்கம்பம் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாஜகவினரும் அப்பகுதியில் குவிந்து இருந்தனர். இதன்பின் வந்த காவல்துறை கொடிக்கம்பத்தை அகற்றி மாநகராட்சி வாகனத்தில் அனுப்பி […]
பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது நெல்லை அம்பாசமுத்திரம் நீதிமன்றம். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு பாஜக கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. இந்த கொடிக்கம்பம் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் வந்த காவல்துறை கொடிக்கம்பத்தை அகற்றி மாநகராட்சி வாகனத்தில் அனுப்பி வைத்தனர். அப்போது, பாஜகவினர் ஜேசிபி வாகனத்தை சேதப்படுத்தி, காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பாஜக முக்கிய நிர்வாகி […]
தமிழகத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் தமிழக அரசால் அடிக்கடி பொய் குற்றசாட்டுகளால் கைது செய்யப்படுவதாக, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குழு ஒன்றை அமைத்தார். முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா, ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தீஸ்வரி, நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நேற்றைய தினம் சென்னை வந்தது. தற்போது இந்த குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி இல்லத்திற்கு சென்றுள்ளனர். […]
சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022 ஜூலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விளம்பர போஸ்டரில் முதல்வர் புகைப்படத்தை அகற்றி பிரதமர் புகைப்படத்தை ஒட்டி விவகாரம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பாக பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே, கொடிக்கம்பம் […]
பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை நவம்பர் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நுங்கப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருந்து வரும் அமர் பிரசாத் ரெட்டி கடந்த சில நாட்களுக்கு முன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடு முன்பு இருந்த […]
பாஜகவின் முக்கிய நிர்வாகியான அமர் பிரசாத் ரெட்டியை மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளது காவல்துறை. தமிழ்நாடு பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருந்து வருபவர் தான் அமர் பிரசாத் ரெட்டி. இவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமானவர் எனவும் கூறப்படுகிறது. இவர், தமிழக அரசும் மீதும், திமுகவுக்கு எதிராகவும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார். இந்த சூழலில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கடந்த சில நாட்களுக்கு முன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை […]