அமர்பிரசாத் ரெட்டி மீது வழக்கு பதிவு..!

கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி கடந்த 19-ம் தேதி சென்னை வந்தார். நரேந்திர மோடி வருகையையொட்டி சித்ரா நகர்ப் பகுதியிலிருந்து ஆட்களை அழைத்து வருவது தொடர்பாக பாஜகவில் மாவட்ட துணைத் தலைவியாக உள்ள ஆண்டாளுக்கும், அதே கட்சியைச் சேர்ந்த நிவேதாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தைப்பூச திருவிழா.! அறுபடை வீடுகளில் குவிந்து வரும் முருக பக்தர்கள்.!
இதற்கிடையில், கடந்த 21-ஆம் தேதி இரவு பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியி கார் ஓட்டுநர் ஸ்ரீதர், நிவேதா உள்ளிட்ட 3 பேர் ஆண்டாள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஆண்டாள் மற்றும் அவரது சகோதரி தேவி ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. சம்பவத்தில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர்கள் இந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுனர் ஸ்ரீதர், நிவேதா மற்றும் கஸ்தூரி ஆகியோர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி நுழைந்து தாக்குதல், காயப்படுத்துதல் போன்ற 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025