பாஜக நிர்வாகி அமர் பிரசாத் இல்லத்துக்கு சென்ற பாஜக ஆய்வு குழு..!
தமிழகத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் தமிழக அரசால் அடிக்கடி பொய் குற்றசாட்டுகளால் கைது செய்யப்படுவதாக, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குழு ஒன்றை அமைத்தார். முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா, ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தீஸ்வரி, நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு நேற்றைய தினம் சென்னை வந்தது. தற்போது இந்த குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி இல்லத்திற்கு சென்றுள்ளனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன் வைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்றிய விவகாரத்தில், காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது பாட்டில் வீச்சு.!
இந்த தகராறை தொடர்ந்து பாஜக நிர்வாகி அமர்ப்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அமர்ப்பிரசாத் ரெட்டிக்கு நவ.3-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீது மட்டும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அமர்ப்பிரசாத் ரெட்டி இல்லத்துக்கு பாஜக ஆய்வு குழு சென்றுள்ளது. அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினரை நேரடியாக சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் கொடிக்கம்ப விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.