WWE : அதிக சம்பளம் வாங்கும் சூப்பர்ஸ்டார் "ரோமன் ரெய்ன்ஸ்"! வியக்க வைக்கும் சொத்து மதிப்பு?

WWE-யில் விளையாடுவதற்கு ரோமன் ரெய்ன்ஸ்க்கு ஒரு ஆண்டுக்கு 5 மில்லியன் டாலர் சம்பளமாக வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

roman reigns net worth

அமெரிக்கா :WWE குத்துச்சண்டை உலகில் தற்போதைய சூப்பர் ஸ்டாராக இருப்பவர் என்றால் ரோமன் ரெய்ன்ஸ் (Roman Reigns) என்று சொல்லலாம். 90ஸ் காலகட்டத்தில் ஹல்க் ஹோகன், ஸ்டோன் கோல்டு, ஜான் சினா ஆகியோர் ரசிகர்களின் ஃபேவரட்டாக இருந்த நிலையில், அவர்களுக்கு அந்த அளவுக்கு, ரசிகர்கள் இருந்தார்களோ அதே அளவுக்கு தற்போது ரோமன் ரெய்ன்ஸ்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

எனவே, ரோமன் ரெய்ன்ஸ் பற்றி எதாவது சுவாரசியமான தகவல்கள் யூடியூப் மற்றும் செய்தி வாயிலாக வெளியானால் போதும். உடனே, ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள். அவர்களுக்காகவே, இப்போது ஒரு சுவாரசியமான செய்தி ரசிகர்களை ஆச்சரியப்படும் அளவுக்கு அவர் WWE -யில் விளையாட ஆண்டுக்கு வாங்கும் சம்பள விவரம் பற்றிய தகவலும் அவருடைய சொத்து மதிப்பு பற்றிய தகவலும் வெளியாகி இருக்கிறது.

சம்பளம்

பொதுவாகவே, WWE-யில் பிரபலமாக இருப்பவர்களுக்குச் சம்பளம் அதிகமாகக் கொடுக்கப்படுவது வழக்கம் தான். எனவே, ரோமன் ரெய்ன்ஸ்க்கு ஆண்டு தோறும்“5 million $”இந்தியன் மதிப்பின் படி(41 கோடியே 77லட்சத்து 17 ஆயிரத்து 250 ரூபாய்)சம்பளமாக வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில், அதிகமாகச் சம்பளம் வாங்கும் விஷயத்திலும் அவர் தான் நம்பர் 1-ஆக இருக்கிறார்.

unknown node

Roman Reigns [file image]WWE-க்கு வருவதற்கு முன்பு, Roman Reigns நடிகராகப் பல படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அதன்பிறகு, கிரிதிரான் கால்பந்து அணிக்காகக் கால் பந்தும் விளையாடி இருக்கிறார். அப்போது கூட அவர் இந்த அளவுக்குச் சம்பளம் வாங்கவில்லை. WWE-யில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான காரணத்தால் தனது சம்பளத்தை ஆண்டுதோறும் உயர்த்திக்கொண்டும் வருகிறார்.

சொத்துமதிப்பு

ஒரு ஆண்டுக்கு 41 கோடிகளுக்கு மேல் அவர் சம்பளம் வாங்குகிறார் என்ற தகவலே, நமக்குப் பெரிய வியப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருடைய சொத்து மதிப்பும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய சொத்துமதிப்பு கிட்டத்தட்ட சுமார் “$20 மில்லியன்” அதாவது இந்தியன் மதிப்பின் படி, 166.76 கோடி இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வீடு மற்றும் கார்கள்

புளோரிடாவின் தம்பாவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருடைய வீட்டின் மதிப்பு கிட்டத்தட்ட 20 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், ரோமன் ரெய்ன்ஸ் கார் வாங்குவதில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். எனவே, அவர் பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார், அவற்றில் பெரும்பாலானவை எஸ்யூவிகள். அதனுடைய விலை (இந்தியன் மதிப்பின் படி 80 லட்சம்),

அதைப்போல, 20.67 லட்சம் விலை கொண்டChevrolet Equinoxமற்றும் 1.47 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் கார், மற்றும் 62லட்சம் மதிப்புடையcadillac escaladeகாரையும் , வாங்கி வைத்து இருக்கிறார்.மேலும், 46.44 லட்சம் மதிப்புக்கொண்டMercedes-Benz GLEகாரையும் 21.25 லட்சம் மதிப்புடையNissan Rogueவகையை சேர்ந்த காரையும் வைத்து இருக்கிறார். ரோமன் ரெய்ன்ஸ்  சொத்து மதிப்பு பற்றிய தகவலைப் பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா ரோமன் ரெய்ன்ஸ் சம்பளமும்..சொத்துமதிப்பும் இவ்வளவோ? என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.