#IPLT20 சென்னை வருகிறார் தல தோனி ஆட்டம் ஆரம்பம்

Default Image

ஐபிஎல் டி2020 கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் 29 – ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, முதலாவதாக மும்பை மற்றும் சென்னை அணிகள் மோத இருக்கின்றன. உலகக்கோப்பை க்கு பின்னர் தோனி எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை இந்த ஆண்டுக்கான வீரர்களின் பட்டியலிலும் அவர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தோனி நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட வரும் மார்ச் 1-ஆம் தேதி சென்னைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் 3 வாரங்கள் சென்னையில் பயிற்சி மேற்கொள்ள போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பயிற்சிக்கு பின் 4 (அ) 5 நாட்கள் அவருடைய சொந்த ஊருக்கு செல்ல உள்ளார். அதன் பின்பு போட்டியில் பங்கேற்க சென்னை திரும்புகிறார். ஏற்கனவே CSK வின் நட்சத்திர ஆட்டக்காரர்களான ரெய்னா மற்றும் ராயுடு  சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்