#WPL 2024 : 2வது வெற்றியை நோக்கி மும்பை இந்தியன்ஸ் ..!
கடந்த பிப்ரவரி 23-ம் தேதி பெண்களுக்கான WPL கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இத்தொடரின் முதல் ஆட்டமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கும் நடைபெற்றது. அப்போட்டியில், மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மும்பை அணியின் சஞ்சனா அப்பந்தை சிக்ஸ் அடித்து வெற்றி பெற வைத்தார்.
தொடரின் இரண்டாவது போட்டியில், பெங்களூரு அணியும் யூபி அணியும் நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியும் முதல் போட்டி போல விறுவிறுப்பாக நடந்தது. இந்த போட்டியை பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது.
Read More :- INDvsENG : அஸ்வின் – குலதீப் அசத்தல் ..! இந்தியா அணிக்கு 192 ரன்கள் இலக்கு ..!
இந்த போட்டியிலும் அதே போல கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த பந்தை சிக்ஸ் அடிக்க முடியாமல் வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்ததால் பெங்களூரு அணி 2 ரன்களில் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து, இன்று நடக்கவிருக்கும் WPL தொடரின் 3-வது போட்டியில் ஒரு வெற்றியுடன் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியும், இந்த தொடரில் முதல் போட்டியில் களமிறங்கும் குஜராத் அணியும் மோதவுள்ளது.
இவ்விரு அணியும் WPL 2023 தொடரில் இரண்டு முறை மோதி இருக்கிறது. இதில் இரண்டு போட்டியிலும் மும்பை அணி குஜராத் அணியை தோற்கடித்துள்ளது. அதனால் வெற்றியின் கணிப்பு மும்பை பக்கமே அதிகமாக இருக்கிறது. இந்த போட்டியை மும்பை அணி வென்று இந்த தொடரின் 2-வது வெற்றியை பதிவு செய்வார்களா ? இல்லை குஜராத் அணி வெற்றியுடன் இந்த தொடரை தொடங்குவார்களா ? என்று பொறுத்து இருந்து பாப்போம்.