உலகக்கோப்பை 2025 : வரலாற்றை படைக்க இது எங்களுக்கு ஒரு வாய்ப்பு...ஹர்மன்ப்ரீத் கவுர் நெகிழ்ச்சி!

சொந்த மண்ணில் முதல் ஐசிசி கோப்பையை வெல்லும் இந்திய அணி, அணி ஒற்றுமையாகவும் இருப்பதாக இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.

Harmanpreet Kaur

அசாம் :ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 இன்று (செப்டம்பர் 30, 2025) பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது, முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இந்த மாபெரும் தொடரில், இந்திய அணி முதல் முறையாக சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, இந்த வாய்ப்பை வரலாற்று சாதனையாக மாற்ற உறுதி பூண்டுள்ளது. இந்திய ரசிகர்களின் ஆதரவுடன், கோப்பையை வெல்வதற்கு அணி தயாராக உள்ளது. உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது குறித்து இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கூறுகையில், “இந்த உலகக் கோப்பை எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. சொந்த மண்ணில் நடக்கும் இந்த தொடர், எங்கள் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இதுவரை எங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு இந்த வெற்றியை பரிசாக அளிக்க விரும்புகிறோம்.” என தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “இந்த பயணத்தில் நாங்கள் பலவற்றை கற்று, மீண்டும் கற்று, தயாராகியுள்ளோம். உலகக் கோப்பையை வெல்லும் தீவிர ஆசை எங்களுக்கு உள்ளது,” என்று அவர் உறுதியாகக் கூறினார். அதே போல, “எங்களிடம் வலுவான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு உள்ளது. ஆல்-ரவுண்டர்கள் உலகக் கோப்பைக்கு முக்கியமான பலத்தை அளிக்கின்றனர்,” என்று ஹர்மன்ப்ரீத் நம்பிக்கை தெரிவித்தார்.

அணியின் ஆதரவு குழுவினரின் பங்கு முக்கியமானது என்று கேப்டன் குறிப்பிட்டார். “எங்கள் ஆதரவு குழு, அணியில் நேர்மறையான சூழலை உருவாக்கியுள்ளது. இது எங்கள் இலக்கை அடைய உதவும். ரசிகர்களின் ஆதரவு எப்போதும் எங்களுக்கு உற்சாகம் அளிக்கிறது. இந்த உலகக் கோப்பையில் அவர்கள் எங்களை உற்சாகப்படுத்துவார்கள் என்று நம்புகிறோம்,” எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.