பெர்த் : ஆஸ்திரேலியா மற்றும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர் 11) காலை தொடங்கி உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகள் மோதும், 3வது போட்டி பெர்த்தில் உள்ள WACA மைதானத்தில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய […]
மும்பை : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியது ரசிகர்களுக்கு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. .குரூப் கட்டத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் மோதிய போட்டியில் தோல்வியற்ற பிறகு இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை தவறிவிட்டது. இந்த சூழலில், இந்திய அணி அடுத்ததாக வரும் தொடர்களில் தற்போதைய கேப்டனாக இருக்கும் ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக அணியை வழி நடத்திச் செல்ல சரியானவராக இருப்பாரா? அல்லது வேறு வீராங்கனையை கேப்டனாக […]
துபாய் : மகளிர் டி20 உலகக்கோப்பை 2024 தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும், இலங்கை அணியும் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தை பிடித்துள்ளது . இந்த போட்டியில் 27 பந்துகளில் 52 ரன்கள் குவித்த ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டநாயகன் விருதை வென்றார். எனவே, போட்டி முடிந்த பிறகு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மகிழ்ச்சியாக தன்னுடைய அணியினரைப் பாராட்டிப் […]
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 4-வது போட்டியாக நேற்று நியூசிலாந்து மகளிர் அணியும் இந்திய மகளிர் அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி மிகச்சிறப்பாக விளையாடி 160 ரன்கள் எடுத்தது. அதிலும், அந்த மகளிர் அணியின் கேப்டனான டெவின் 57 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். மேலும் இந்த 160 ரன்கள் எட்டுவதற்கு மிக முக்கியக் காரணமாகவும் அவர் அமைந்திருந்தார். அதைத் தொடர்ந்து அடுத்ததாக களமிறங்கிய இந்திய மகளிர் அணி வீராங்கனைகளின் […]
T20I Women series: வங்கதேசத்துக்கு எதிரான இந்திய மகளிர் அணியின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான மகளிர் டி20 போட்டிக்கான இந்திய மகளிர் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. ஏப்ரல் 28 ஆம் தேதி தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன. அதன்படி, முதல் ஆட்டம் ஏப்ரல் 28 ஆம் தேதியும், இரண்டாவது ஆட்டம் 30 ஆம் தேதியும் நடைபெறும். மூன்றாவது ஆட்டம் மே 2ம் […]
பெண்களுக்கான WPL 2024 தொடரின் 3-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும் நேற்று மோதியது. இதில் டாஸ் வென்று மும்பை பெண்கள் அணி பந்து வீச முடிவு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணி, மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. குஜராத் அணியில் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், அந்த அணி ரன்களை எடுக்க மிகவும் சிரமித்திற்குள்ளானது. இறுதியில் குஜராத் […]
பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது (பிசிசிஐ) பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது.அதன்படி,இப்போட்டிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும்,ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில்,சர்வதேச மகளிர் டி20 போட்டி இடம்பெறுவது இதுவே முதல்முறை என்ற நிலையில், இந்தியா,ஆஸ்திரேலியா,பார்படாஸ்,பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன.அதேசமயம்,இலங்கை,இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா […]
இந்திய மகளிர் டி20 அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப்பைச் சேர்ந்த 32 வயதான இந்திய மகளிர் டி20 அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாள்களாக லேசான காய்ச்சல் இருந்ததால் அப்போது மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. pic.twitter.com/Ge58dgSxpe — Harmanpreet Kaur (@ImHarmanpreet) March 30, 2021 இதனைத்தொடர்ந்து வீட்டில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
தென்ஆப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 6 டி20 போட்டிகளில் விளையாடினார். நேற்று சூரத்தில் ஆறாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 175 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தனர். பின்னர் 176 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 17.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 105 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.இதில் 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டு போட்டி மழையால் […]