INDvENG : விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா ஹர்திக் பாண்டியா? சாதனை படைக்க பொன்னான வாய்ப்பு!
நான்காவது டி20யில் ஹர்திக் பாண்டியா சிறந்த சாதனை படைக்க ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதால் அந்த சாதனையை அவர் படைப்பாரா என ரசிகர்கள் காத்துளளனர்.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டி நாளை (ஜனவரி 31) அன்று நடைபெற உள்ளது. இரு அணிகள் மோதும் இந்த போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தற்போது 2-1 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய நிலையில், நான்காவது போட்டியில் வெற்றிபெற்று தொடரை வெல்லவென்றும் என்ற நோக்கத்தோடு இந்திய அணி களமிறங்குகிறது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா சாதனை ஒன்றையும் படைக்கவுள்ளார்.
அது என்ன சாதனை என்றால் , டி20 போட்டிகளில் 16-20 ஓவர்களில் அதிகமான ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனை தான். ஹர்திக் பாண்டியா டி20 போட்டிகளில் 16 முதல் 20 ஓவர்களில் 1029 ரன்கள் எடுத்துள்ளார். இப்போது, அவர் எம்எஸ் தோனியை கடந்துவிட்டார், ஏனென்றால் தோனி 1014 ரன்கள் எடுத்தார்.
இந்த பட்டியலில் 16-20 ஓவர்களில் 1032 ரன்கள் எடுத்து விராட் கோலி முதலில் இருக்கிறார்.இப்போது, அடுத்த T20 போட்டியில் ஹர்திக் பாண்டியா 4 ரன்கள் எடுத்தால், விராட் கோலியின் சாதனையை முறியடித்துவிடுவார்.எனவே, 4 ரன்கள் 16- 20 ஓவர்களில் எடுத்து இந்த சாதனையை படைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும், மூன்றாவது போட்டியில் ஹர்திக் பாண்டியா இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்திருந்தார்.இருப்பினும், தற்போது தோல்விக்கு அவரும் முக்கிய காரணம் என முன்னாள் கிரிகெட் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்து பேசி வருகிறார்கள். ஏனென்றால், ஹர்திக் பாண்டியா 35 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்தார்.
அவர் மெதுவாக விளையாடிய காரணத்தால் ரன்ரேட் அதிகமாகி கொண்டு இருந்த காரணத்தால் மற்ற வீரர்கள் சவாலான சிக்ஸர்கள் அடிக்க சென்று ஆட்டமிழந்தனர். எனவே, அவர் மற்ற வீரர்களுக்கு அழுத்தத்தை கொடுத்ததாக முன்னாள் வீரர்கள் பார்திவ் படேல், கெவின் பீட்ரசன், உள்ளிட்டோர் பேசியுள்ளனர். எனவே, 4-வது போட்டியில் அதிரடியாக விளையாடி பாண்டிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.