ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவு.. டெஸ்ட் தொடரில் இருந்து வார்னர் விலகல்!

Australia team batsman David Warner has been ruled out of the test series against India due to injury. The test series starts at 17th dec.

ந்தியாக்கு எதிரான இரண்டாம் ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர், டெஸ்ட் தொடரில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றிய நிலையில், டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதனையடுத்து வரும் 17 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டிகள் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், 2 ஆம் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யும் போது நான்காம் ஓவரில் ஷிகர் தவான் மிட்-ஆஃப் சைடு நோக்கி பந்தை அடிக்க, வார்னர் குறுக்கே வந்து பந்தைத் தடுக்க ஒரு டைவ் அடித்தார். அப்பொழுது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் களத்திலேயே சுருண்டு விழுந்தார். நடக்க முடியாமல் துடித்த வார்னரை மைதானத்திற்கு வெளியே அழைத்து செல்லப்பட்டார்.

இந்த காயம் காரணமாக ஒருநாள், டி-20 தொடரில் இருந்து வார்னர் விலகுவதாக அறிவித்தார். அதன்பின் நடைபெறும் டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்பொழுது டெஸ்ட் தொடரில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.