மீண்டும் ஒரு சதமடித்து அணியை காப்பாற்றிய கிங் கோலி!! இந்திய அணி 250க்கு ஆல் அவுட்!
- இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது
- முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆளாகியுள்ளது
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தது. இந்திய பேட்டிங் எதிர்பார்த்தது போல் பெரிதாக செயல்படவில்லை. கேப்டன் விராட் கோலியை தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
துவக்க வீரர் ரோகித் சர்மா இந்தக் டக் அவுட் ஆகி வெளியேற தவான் 21 ரன்களும், அம்பத்தி ராயுடு 18 ரன்களும் தோனி 0 ரன்களும் எடுத்தனர். அதன் பின்னர் வந்த விஜய் சங்கர் விராட் கோலிக்கு அற்புதமான கைகொடுத்தார் . அவர் 41 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார் பின்னர் வந்த ரவிந்திர ஜடேஜா 21 ரன்கள் எடுக்க இந்திய அணி 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. எப்போதும் போல் இந்திய அணியை பற்றிக்கொண்டு கரை சேர்த்தார் விராட் கோலி. அவர் 120 பந்துகளில் 116 ரன்கள் விளாசினார்.