இன்றைய நாளின் 2-ஆம் ஆட்டம் !! பஞ்சாப் – குஜராத் பலப்பரீட்சை !!

PBKSvsGT

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் 37-வது போட்டியாக இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு முல்லான்பூரில் உள்ள பிசிஏ மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த இரு அணிகளும் இந்த ஐபிஎல் தொடரில் இதற்கு முன் விளையாடிய போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றியை பெற்றது.

நேருக்கு நேர்

இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அந்த 4 முறை குஜராத் அணி 2 முறையும், பஞ்சாப் அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். அதனால் நேருக்கு நேரில் அதிகரிக்க குஜராத் அணியும்,  பஞ்சாப் அணியும் இன்றைய போட்டியில் முனைப்புடன் விளையாடுவார்கள் என்று எதிர்க்கப்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் வீரர்கள் 

குஜராத் அணி வீரர்கள் 

ஷுப்மான் கில் (கேப்டன்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ராகுல் டெவாடியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன்.

பஞ்சாப் அணி வீரர்கள் 

ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், சிக்கந்தர் ராசா, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், ஹர்ப்ரீத் பிரார், ககிசோ ரபாடா, ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர்.

கடந்த பஞ்சாப் போட்டியில் ஷிகர் தவான் காயம் காரணமாக விலகியதால் பஞ்சாப் அணியின் கேப்டனாக சாம் கர்ரன் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்றைய போட்டியில் ஷிகர் தவான் விளையாடுவர் என்று ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்