இது சும்மா ட்ரைலர் தான் மா..இம்ரான் தாஹிர்..!
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி வருகின்ற 19 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.30க்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேலும் ஐபிஎல் போட்டிகனான அட்டவணையையும் அண்மையில் வெளியானது.
இந்நிலையில் மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகாக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த இரண்டு அணியும் மோதவுள்ளது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்வீட்டர் பக்கத்தில் பந்துவீச்சாளர் ஜோஷ் மற்றும் சாம் கரண் ஆகிய இரண்டு பேரின் புகைப்படத்தை வெளியிட்டுயுள்ளனர், அதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர், பதில் அளித்துள்ளார்.
அதில் இம்ரான் தாஹிர் “இது சும்மா டிரெய்லர் தான் மா இன்னும் நிறைய சிறப்பான தரமான சம்பவங்களை காத்துகிட்டு இருக்கு லைட்டா அடிச்சதுக்கு இப்படினா நாங்க ஆளையே தூக்குறவங்க எடுடா வண்டிய போடுடா விசில் என்று பதிவு செய்துள்ளார்.
Ithu Chumma trailer than ma.innum neraya sirappana tharamana sambhavangal kathukittu irukku.Light a adichuthukkey ippidi na Nanga @ChennaiIPL aalaye thookaravanga #eduda vandiya poduda whistle https://t.co/0f89idPKjP
— Imran Tahir (@ImranTahirSA) September 14, 2020