‘பிறந்தநாள் பரிசுக்கு நன்றி’ ..! இன்ஸ்டாவில் வாழ்த்திய ‘தல’ தோனி!

Dhoni Congrats Indian Team

தோனி: நேற்று நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றிருப்பார்கள்.

மேலும், இந்திய பிரதமரான ‘நரேந்திர மோடி’ இந்திய அணிக்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

அதன்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த பதிவில், 2024 உலகக் கோப்பை சாம்பியன்களுக்கு வாழ்த்துக்கள், என் இதயத் துடிப்பு அதிகரித்துவிட்டது.

கடைசி வரை அமைதியாக இருந்து, தன்னம்பிக்கையுடன், நீங்கள் இதற்கு முன் செய்ததையே இப்போது செய்து சிறப்பாக முடித்துள்ளீர்கள். உலகக் கோப்பையை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வந்ததற்கு, இந்தியாவிலும் உலகின் வெவ்வேறு பகுதியில் இருக்கும் இந்தியர்கள் சார்பாக நன்றியும், வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விலைமதிப்பற்ற இந்த பிறந்தநாள் பரிசுக்கு நன்றி” என பதிவிட்டிருந்தார். வரும் ஜூலை-7 ம் தேதி அன்று தல தோனியின் 43-வது பிறந்தநாள் வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by M S Dhoni (@mahi7781)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation