நாளை ஒரு உற்சாகமான செய்தியை அறிவிக்கப்போவதாக எம்.எஸ்.தோனி சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, நாளை செப்டம்பர் 25 அன்று 2 மணிக்கு, ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரும் செய்தியை அறிவிக்கப்போவதாக தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தோனி, கடந்த 2020இல் இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் இல் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக தோனி அறிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஐபிஎல் சீசனிற்கு பிறகு தற்போது மீண்டும் பழைய முறைப்படி(Home & Away) ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெற இருப்பதாக நேற்று கங்குலி அறிவித்த நிலையில், தோனி இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட இருப்பதாகக் கூறுவது, அவர் தனது ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
unknown node