#T20WORLDCUP2022: ஜார்ஜ் முன்சியின் அரைசதத்துடன் ஸ்காட்லாந்து அணி ரன் குவிப்பு.!

டி-20 உலகக்கோப்பை தொடரின் மூன்றாவது போட்டியில் ஸ்காட்லாந்து அணி, 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் குவித்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பையின் தகுதிச்சுற்று போட்டிகள் அக்-16 முதல் அக்-21 வரை நடைபெறுகிறது. இன்று நடைபெறும் மூன்றாவது தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்திருந்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி, 5 ஓவர்களில்  விளையாடிக்கொண்டிருக்கும் போது மழை குறுக்கிட்டது, இருந்தாலும் சிறிது நேரத்திற்கு பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜார்ஜ் முன்சி மட்டும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். முன்சி 66 ரன்கள் குவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்களும், அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்