#T20 World Cup 2022: அயர்லாந்து வெற்றி பெற 147 ரன்கள் இலக்கு.!
டி-20 உலகக்கோப்பை தொடரின் 11ஆவது போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி, 147 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் 11 ஆவது தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இந்த போட்டி, சூப்பர்-12க்கான வாய்ப்பை உறுதி செய்யும் போட்டி என்பது கூடுதல் கவனம்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, சுமாரான தொடக்கத்தையே கொடுத்தது. முடிவில் அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிராண்டன் கிங் 62 ரன்கள் குவித்தார். அயர்லாந்து அணி தரப்பில் கரேத் டெலானி 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
இந்த போட்டியில் வெற்றி பெற அயர்லாந்துக்கு 147 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி, வெற்றி இலக்காக நிர்ணயித்திருக்கிறது.